கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோவை முத்தூட் மினி நிறுவனத்தில் 812 சவரன் நகைகள் கொள்ளையால் பரபரப்பு

Google Oneindia Tamil News

கோவை: கோவை முத்தூட் மினி நிறுவனத்தில் 812 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.

கோவை ராமநாதபுரம் முத்தூட் மினி என்ற நகை அடகு நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சுற்றியுள்ள பகுதி மக்கள் தங்கள் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர்.

நேற்று மாலை பெண் ஊழியர்கள் மட்டுமே இருந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். அவர் அங்கிருந்த இரு பெண் ஊழியர்களை மிரட்டியுள்ளார்.

பெள்ளாச்சி ரயில் நிலையத்தில் போலீசார் திடீர் சோதனை... வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் பீதிபெள்ளாச்சி ரயில் நிலையத்தில் போலீசார் திடீர் சோதனை... வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் பீதி

புகார்

புகார்

பின்னர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி 812 சவரன் நகைகளையும் ரூ 1 லட்சம் ரொக்கத்தையும் கொள்ளையடித்துச் சென்றார். இதுகுறித்து அந்த பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

கொள்ளை

கொள்ளை

புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு வருகை தந்த போலீஸார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளனர். பின்னர் பெண் ஊழியர்கள் சொன்னது போல் அவர்களை தாக்கி மிரட்டி கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விசாரணை

விசாரணை

இந்த கொள்ளையை தனிநபரான அவர் மட்டும் செய்தாரா இல்லை அவரது கூட்டாளிகள் யாரேனும் கீழே நின்று கொண்டிருந்தனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடகு வைத்தவர்கள்

அடகு வைத்தவர்கள்

நேற்று நடந்த கொள்ளை சம்பவம் குறித்து தற்போதுதான் தகவல் பரவியுள்ளது. இதையடுத்து நிறுவனத்தில் நகை கொள்ளை என்ற செய்தியை கேட்டு அங்கு நகை அடகு வைத்தவர்கள் கூடியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
812 sovereigns of gold and cash were robbed by attacking lady staffs in Coimbatore Muthoot Mini Finance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X