தாயின் சிறுநீரக ஆபரேஷனுக்காக கோவை வந்த பெங்களூர் சிறுவன்! விஜய்யை பார்க்க முடியாமல் ஏமாற்றம்!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை தனியார் மருத்துவமனையில் தனது தாயின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக வந்த சிறுவன், கூட்ட நெரிசல் காரணமாக முதல்வர் விஜய்யை பார்க்க முடியாததால் ஏமாற்றமடைந்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சார்லஸ் என்ற சிறுவன், தனது தாயாருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக ஐந்து நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்துள்ளார்.

அவரது தாயாருக்கு கோவையில் உள்ள கே.எம்.சி.எச். மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

bangalore boy in coimbatore

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல்வருமான விஜய் கோவைக்கு வருகை தருவதை அறிந்த சார்லஸ், அவரைப் பார்ப்பதற்காக வந்துள்ளார். ஆனால், கூட்ட நெரிசல் காரணமாக விஜய்யை பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளார்.

இதுகுறித்து சார்லஸ் கூறுகையில், "நான் பெங்களூருவிலிருந்து எனது தாயாரின் அறுவை சிகிச்சைக்காக கோவைக்கு வந்தேன். விஜய் வருவதை அறிந்து அவரைப் பார்ப்பதற்காக வந்தேன். அவரை நேரில் பார்த்தேன்; ஆனால், அவரால் என்னைப் பார்க்க முடியவில்லை.

கூட்ட நெரிசல் காரணமாக அவரைச் சந்திக்க முடியவில்லை. இருப்பினும், கோவைக்கு வருகை தந்த அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி" என்றார்.

கோவை காந்திபுரத்தில் பெரியார் அறிவுலகம் திறப்பு விழாவுக்காக முதல்வர் விஜய் வந்திருந்தார். தனி விமானம் மூலம் கோவை சென்ற அவர், விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெறும் இடம் வரை ரோடு ஷோ நடத்தினார். அப்போது அவரை வரவேற்க காத்திருந்த பொதுமக்களுக்கு கையசைத்தார்.

விஜய்யை பார்த்ததும் மக்கள் உற்சாகமடைந்தனர். கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த விஜய், அங்கு ரூ 408 கோடி மதிப்பிலான 89 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்.

மேலும் 34 கோடி ரூபாயில் 9,343 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ரூ 32.32 கோடி மதிப்பில் 144 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பெண்களுக்கு சுய உதவிக்குழுக் கடன்கள், ரூ 9 லட்சத்தில் இல்லம் ஆகியவற்றை வழங்கினார். பட்டா வழங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கைக் கால்களையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு விஜய், கேரளா மாநிலம் திருச்சூருக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்வதாக இருந்தது. ஆனால் கோவையில் கனமழை பெய்து வருவதால் கேரள பயணத்தை ரத்து செய்துவிட்டார்.

இதையடுத்து ஏர்போர்ட் செல்லும் விஜய்யை பார்க்க பொதுமக்கள் ஆவலுடன் மழையிலேயே காத்திருந்தனர். அது போல் விஜய்யும் கொட்டும் மழையிலும் குடை பிடித்தவாறு மக்களை சந்தித்தார். மக்கள் சந்திப்பு கூட்டங்களை முடித்துக் கொண்டு சென்னைக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+