பார்ட்டியால் ’தாமரை’ புள்ளிக்கு வந்த வினை! சொந்த கட்சிக்காரரிடம் வைர மோதிரம் அபேஸ்! இது கோவை பாஜக!

Subscribe to Oneindia Tamil

கோவை : பாஜக பிரமுகரே பாஜக பிரமுகரை தாக்கியதோடு, வைர மோதிரத்தையும் அபேஸ் செய்ததும் கோவை பாஜகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகார் அளித்தவர் சிறுபான்மையினர் அணி நிர்வாகி என்பதும், கைதானவர் இளைஞரணி நிர்வாகி என்பதும் தெரியவந்துள்ளது.

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் தனியார் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த ஓட்டலில் நடைபெறும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நட்சத்திர விடுதிக்கு விலை உயர்ந்த பென்ஸ் காரில் வந்த ஆண்கள் நான்கு பேர் நிகழ்ச்சியில் அனுமதிக்குமாறு நட்சத்திர விடுதி பாதுகாவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பவுன்சர்கள்

பவுன்சர்கள்

ஆனால் பாதுகாவலர்களாக இருந்த பவுன்சர்கள் அவர்களை அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த நான்கு பேரும் பாதுகாவலர்களை தாக்கினர். தொடர்ந்து மற்ற பாதுகாவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்றதால் தகராறு மோதலாக மாறியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தகராறில் ஈடுபட்ட 4 பேரை அப்புறப்படுத்த முயற்சித்தனர்.

பாஜக பிரமுகர்

பாஜக பிரமுகர்

ஆனால் அவர்கள் அங்கேயே காவல்துறையினரிடமும் ஆபாச வார்த்தைகளில் பேசி தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் சொகுசு காரில் புறப்பட்டு சென்றனர். இது குறித்து நட்சத்திர விடுதியின் கணக்காளர் விஷ்வபாரதி அளித்த புகாரின் பேரில், லட்சுமணன், டேவிட், ஜான்சன், ஜெரிஷ் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஜான்சன் என்பவர் பாஜகவின் சிறுபான்மை பிரிவு பொறுப்பாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வைர மோதிரம் அபேஸ்

வைர மோதிரம் அபேஸ்

இந்த நிலையில் தாக்குதலுக்கு உள்ளான போது பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் ஜான்சனின் மகன் டேவிட் பல் உடைந்ததோடு அவர் அணிந்திருந்த வைர மோதிரம் காணாமல் போனதாகவும் அதன் மதிப்பு மூன்று லட்சம் என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் ஜான்சனை தாக்கியதாக அவர் அழைத்த புகாரின் பேரில் விஷ்ணு ரமேஷ் வில்லா ரமேஷ் ரஞ்சித் சுதர்சன் கொலை முயற்சி வழிப்பறி தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

 அதிரடி கைது

அதிரடி கைது

இந்த நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ரெயின்போ ரமேஷ் ஒரு மாதத்திற்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ரெயின்போ ரமேஷ் பாஜக இளைஞரணி செயலாளராகவும் அந்த பப்பில் பகுதி நேரம் பவுன்ஸராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்துள்ளது. பாஜக பிரமுகரே பாஜக பிரமுகரை தாக்கியதோடு, வைர மோதிரத்தையும் அபேஸ் செய்ததும் கோவை பாஜகவில் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+