தமிழகம் பாதுகாப்பான கைகளில் இல்லை! திமுக கருணாநிதி &சன்ஸ்க்கான கட்சி! கோவையில் கொந்தளித்த ஜேபி நட்டா
கோவை : நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளதாகவும் தமிழகம் பாதுகாப்பான கைகளில் இல்லை எனவும் அடுத்த முறை தான் இப்பகுதிக்கு வரும் போது நீலகிரியில் தாமரை மலர்ந்திருக்கும் என பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கூறியுள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பாஜக சார்பில் கோவை நீலகிரி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா,மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை,பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய ஜெ.பி.நட்டா," தமிழகம் பழமையான மொழி, கலாச்சாரம் கொண்ட ஆன்மீக பூமி என்றும். இப்பகுதி இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. தற்போது கூடியுள்ள கூட்டம் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.

ஜேபி நட்டா
மேலும்,"மோடி தலைமையிலான இந்தியா முன்னேறி வருகிறது. கொரோனா, உக்ரைன் போர் ஆகியவற்றுக்கு பிறகு உலக நாடுகளின் பொருளாதார நிலை மோசமடைந்துள்ள சூழலில் இந்தியாவின் பொருளாதாரம் முன்னேற்றமடைந்து வருகிறது. ஏற்றுமதியில் உலகில் இரண்டாவது இடத்தில் இந்தியா இருப்பதாகவும் பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளுக்கு ஆட்சியிலும் கட்சியிலும் அதிகாரம் வழங்கப்பட்டு வருகிறது.80 கோடி மக்கள் பயனளிக்கும் உணவு, தானியங்கள் திட்டம் மூலம் ஏழை மக்கள் பசியாறி கொண்டிருக்கிறார்கள்

பிரதமர் மோடி
11 கோடி மக்களுக்கு 5 இலட்ச ரூபாய் மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு பட்டியலினம் மற்றும் பழங்குடி சமுகத்தை சேர்ந்தவர்களை குடியரசு தலைவராக்கியுள்ளோம். பட்டியலினம் மற்றும் பழங்குடியை சேர்ந்த பலர் மத்திய அமைச்சராக்கப்பட்டுள்ளனர். பெண்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் பெண்கள் இளைஞர்கள் வளர்ச்சிக்காக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகம் அதிகளவிலான மருத்துவ கல்லூரிகளை பெற்றுள்ளது. விவசாயிகள் வங்கி கணக்கில் 4 மாதத்திற்கு ஒருமுறை 2 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசு
பயிர் பாதுகாப்பு திட்டம் மூலம் இழப்பீடு வழங்கப்பட்டு வருவதுடன் ஒரு இலட்சம் கோடி ரூபாயை விவசாய துறைக்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. நாடு முழுவதும் 220 கோடி கொரோனா தடுப்பூசி மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. 9 மாதத்தில் 2 தடுப்பூசிகளை இந்தியா உருவாக்கி 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததுடன் 44 நாடுகளுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கியுள்ளோம். பிரதமர் மோடி முயற்சியால் உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட 32 ஆயிரம் இந்திய மாணவர்கள் பத்திரமாக நாடு திரும்பினர்.

திமுக
11 மருத்துவக் கல்லூரிகள் மூலம் தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பு வலுவடைந்துள்ளது. நாடு பாதுகாப்பானவர் கைகளில் உள்ளது ஆனால் மாநிலம் பாதுகாப்பான கைகளில் இல்லை. திமுக ஒரு குடும்ப கட்சி. திமுக என்பதற்கு வாரிசு அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து என்பது தான் விளக்கம். திமுக மக்களுக்காக ஆட்சி செய்யவில்லை. நமக்கு நாடு தான் முக்கியம் ஆனால் திமுகவினர் கொள்ளையடிக்கவே கட்சி நடத்துகிறார்கள்., குடும்பத்திற்காக ஆட்சி நடத்துகிறார்கள்

ராகில் காந்தி
பாஜகவிற்கு முதலில் நாடு,பிறகு கட்சி அதன்பிறகு தான் தனி மனிதன். ஆனால் திமுகவில் சுயநலன் தான் முதலில் இருக்கும். பிறகு கட்சி, கடைசியாக நாடு என இருக்கிறது. ராகுல்காந்தி பாரத் ஜோடா யாத்திரை என நாட்டை பிளவுப்படுத்துவர்களுடன் நடந்து கொண்டிருப்பதாகவும் நாம் ஒருமைப்பாட்டை வலியுறுத்துகிறோம். ஆனால் அவர்கள் பிரிவினையை தூண்டுகிறார்கள். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை பிரதமர் மோடி இரத்து செய்து ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் முழுமையாக இணைத்துள்ளார். அதே வேளையில் திமுக., கருணாநிதி & சன்ஸ்க்கான கட்சி. காங்கிரஸ்., காந்தி & சன்ஸ்க்கான கட்சி. அடுத்த முறை தான் இப்பகுதிக்கு வரும் போது நீலகிரியில் தாமரை மலர்ந்திருக்கும்" என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications