கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெள்ளாச்சி ரயில் நிலையத்தில் போலீசார் திடீர் சோதனை... வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் பீதி

Google Oneindia Tamil News

Recommended Video

    இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி... மதுரை ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு-வீடியோ

    பொள்ளாச்சி: வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஞாயிறன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடட்டத்தின் போது கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

    Bomb threat: Police raid at Pollachi railway station, The passengers panic

    இந்த தாக்குதல்களில் இதுவரை 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து தமிழகத்தின் கடலோர பகுதிகள் மற்றும் பிற முக்கிய வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    பள்ளிகளின் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனையா.? போலீஸிடம் புகாரளிக்க தலைமையாசிரியர்களுக்கு உத்தரவுபள்ளிகளின் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனையா.? போலீஸிடம் புகாரளிக்க தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு

    இந்நிலையில், பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, உளவுத்துறை எச்சரிக்கையால், தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில், போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, தமிழக ரயில்வே போலீசார், தொடர்ந்து தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடவும், தீவிர சோதனைகளை மேற்கொள்ளவும், ரயில்வே காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

    English summary
    Bomb threat: Police raid at Pollachi railway station
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X