கோவை கார் வெடிப்பு சம்பவம்: பலியான ஜமேசா முபீன் உடலை அடக்கம் செய்ய மறுத்த ஜமாத்துக்கள்!
கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தீக்காயம் அடைந்து பலியான நபரின் உடலை தகனம் செய்வதற்கு ஜமாத்துக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
கோவை கோட்டைமேடு பகுதியில் பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் உள்ளது.
அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்தக் கோவில் பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும்.

வெடித்து சிதறிய கார்
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு அந்த வழியாக கார் ஒன்று வந்தது. கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்புறம் வந்தபோது, அங்கு சாலையில் அமைக்கப்பட்டு இருந்த வேகத்தடையில் ஏறி இறங்கிய கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த சத்தத்தால் அப்பகுதி ஒரு நிமிடம் அதிர்ந்தது. பயங்கர சத்தத்தை கேட்டதும் ஏதோ அசம்பாவிதம் நடந்து உள்ளது என்ற அச்சத்துடன் அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர்.

2 துண்டாக உடைந்த கார்
அப்போது கார் 2 துண்டாக உடைந்து கிடந்ததுடன் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதில் காரில் இருந்த நபர் தீயில் கருகி உயிரிழந்தார். அப்பகுதியில் இருந்த மக்கள் இந்த சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறை மற்றும் தடயவியல் துறையினர் வெடி விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து இரும்பு ஆணிகள், பால்ரஸ் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர்.

திட்டமிட்ட சதியா?
2 சிலிண்டர்களும் கருகிய நிலையில் கைப்பற்றப்பட்டன. தீபாவளி பண்டிகையை சீர்குலைக்க நடந்த திட்டமிட்ட சதியா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். கார் வெடித்ததில் இறந்தவர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபீன் என்பதும், அவர் பழைய துணி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. ஏற்கனவே அவரிடம் 2019-ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியதும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.

5 பேர் கைது
ஜமேசா முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் நாட்டு வெடிகுண்டு செய்வதற்கான மூலப் பொருட்கள் அவர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கோவை உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ஜமேசா முபீன் வீட்டில் நேற்று இரவு 3 மணி நேரம் சோதனை நடத்தினர். அவருக்கு நெருக்கமானவர்களுடன் விசாரணை நடத்திய போலீசார் இந்த சம்பவத்தில் 5 பேரை கைது செய்து அவர்களிடம் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

உடலை அடக்கம் செய்ய மறுப்பு
இதனிடையே, கார் வெடி விபத்தில் உயிரிழந்த ஜமேஷாவின் உடல் கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்தததையடுத்து ஜமேசா முபீனின் மனைவியிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், ஜமேசா முபீனின் உடலை அடக்கம் செய்ய ஜமாத்துக்கள் முன்வரவில்லை.

அமைதியை விரும்புவதால்..
சமூக விரோத செயலுக்கு திட்டமிட்டது போல ஜமேசா முபீனின் மரணம் இருப்பதால் அவரது உடலை அடக்கம் செய்ய முன்வரவில்லை என்றும் அமைதியை விரும்புவதாலும் சமூக விரோத செயலுக்கு துணை போகாமல் இருப்பதற்காகவும் மறுப்பு தெரிவித்ததாக ஜமாத்துக்கள் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. எனினும் மனிதாபிமான அடிப்படையில் பூ மார்க்கெட் ஜமாத்தில் ஜமேசா முபீனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications