கோவையில் சாலை வலம் சென்ற முதல்வர் ஸ்டாலின்.. தொண்டர்கள் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
கோவை: திருப்பூர் மாவட்டம், உடுமலையில் நாளை நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதற்காக கோவை விமான நிலையம் இன்று வந்தடைந்தார். கோவையில் விமான நிலையம் முதல் அவிநாசி சாலை வரை முதல்வர் சாலை வலம் சென்றார். முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பளித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்காக ஞாயிறன்று மாலை கோவை விமான நிலையம் வந்தடைந்த முதல்வருக்கு, திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோவையில் விமான நிலையம் முதல் அவிநாசி சாலை வரை முதல்வர் சாலை வலம் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பளித்தனர். பின்னர், முதல்வர் ஸ்டாலின் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டைக்கு கார் மூலம் புறப்பட்டார். உடுமலைப்பேட்டையில் இன்று இரவு தங்கவுள்ளார்.
உடுமலைப்பேட்டை நேதாஜி மைதானத்தில் நாளை காலை 10:00 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அங்கிருந்து தளபதி அறிவாலயம் கட்சி அலுவலகத்திற்குச் சென்று நிகழ்ச்சியை முடித்துவிட்டு, மதியம் 12:00 மணிக்கு பொள்ளாச்சி செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். பின்னர், மதியம் 12:15 மணிக்கு புறப்பட்டு, 1:15 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார்.
தொடர்ந்து, மதியம் 2:10 மணிக்கு விமானம் மூலம் பயணித்து, மாலை 3:15 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்றடைகிறார். முதல்வரின் வருகையை ஒட்டி அவர் பயணிக்கும் வழித்தடங்கள் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல்வரின் வருகையால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் கருமத்தம்பட்டி, தென்னம்பாளையம் ஆகிய இடங்களில் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதனால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
-
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications