கோவை மக்களுக்கு குட்நியூஸ்.. அவினாசி மேம்பாலத்தில் வரப்போகும் செம வசதி.. என்ன சிறப்பு தெரியுமா?
கோவை: கோவை அவினாசி மேம்பால திட்டத்தில் ஏறு, இறங்கு தளம் அமைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கோவை மாநகர் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த கோவை-அவினாசி சாலை மிக முக்கியமானது. இந்த சாலையில் தான் விமான நிலையம், கல்லூரிகள், பள்ளிகள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், டைட்டல் பார்க் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாகவும் இது உள்ளதால் எப்போதும் சாலையில் வாகன நெரிசல் இருக்கும். இதை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ரூ.1157 கோடி பணி
இதன் தொடர்ச்சியாக கோவை அவினாசி ரோட்டில் ரூ.1157 கோடி மதிப்பீட்டில் 10 கிலோமீட்டர் தொலைவுக்கு புதிய மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. உப்பிலிபாளையம் முதல் 4 இடங்களில் மேம்பால இறங்குதளம், ஏறுதளம் அமைக்கப்பட உள்ளது. குறிப்பாக ஏர்போர்ட் ரோடு, அவினாசி ரோடு, கல்லபட்டி ரோடு சந்திப்புகளில் ஏறு, இறங்கு தளங்கள் அமைக்கப்பட உள்ளது.

சிறப்பு குழு
இதற்கு நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது என கூறப்படுகிறது. இதனால் இந்த பணி இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் நிலம் கையகப்படுத்துவதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் சிறப்பு குழு அமைக்க உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

20 திட்டங்கள் தாமதம்
இதுபற்றி மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‛‛நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்துவிட்டது. நிலம் கையகப்படுத்தும் பணிக்கு விரைவில் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். நிலம் கையகப்படுத்துவதில் உள்ள தாமதத்தால் கோவை மாவட்டத்தில் மட்டும் 20 திட்டங்கள் கிடப்பில் உள்ளன. அதிகாரிகள் நியமிக்கப்பட்டவுடன் பணிகள் விரைவாகும்'' என்றார்.

விரைவு நடவடிக்கை தேவை
இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‛‛அரசு விரைவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அப்போது தான் மேம்பாலம், சாலை பணிகள் விரைவாக முடியும். நிலம் கையகப்படுத்துவதில் உள்ள பிரச்சனையால் சில பணிகள் தடைப்பட்டுள்ளது. இதன்மூலம் திட்டம் முழுவதும் தாமதமாகலாம். அவினாசி ரோடு மேம்பாலம், மேற்கு பைபாஸ் ரோடு ஆகியவை கோவை நகருக்கான முக்கிய திட்டங்களாக உள்ளன. இதனை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications