காதலனின் ஆசையை நிறைவேற்ற டூவீலரில் கிளம்பிய காதலி.. போத்தனூரில் நடந்ததை கேட்டு அதிர்ந்த கோவை
கோவை: கோவையில் நகையை கொள்ளையடித்த காதல் ஜோடி இப்போது விசாரணையின் பிடியில் உள்ளது.. கல்லூரியில் படிக்கம் இவர்கள், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுள்ளனர்.. அதற்கான பணத்தையும் உடனே கொள்ளையடிக்க முடிவு செய்துள்ளனர்.. ஆனால் முதல் கொள்ளையிலேயே வசமாக சிக்கிவிட்டார்கள்.. இந்த கொள்ளை குறித்து கைதானவர்கள் வாக்குமூலம் தந்துள்ளனர்.
கோவை போத்தனூர் அருகே வெள்ளலூரில் வசித்து வருகிறார் 70 வயது சரஸ்வதி பாட்டி.. இவர் சம்பவத்தன்று, தனது வீட்டின் முன்பு உறவினர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது ஸ்கூட்டியில் ஒரு பெண்ணும் , ஆணும் வந்துள்ளனர்.. இருவருமே முகத்தை மாஸ்க் போட்டு மூடியிருந்தனர். அதில் அந்த இளைஞர் மட்டும் பைக்கிலிருந்து இறங்கி வந்து, சரஸ்வதி பாட்டியிடம், பல் டாக்டர் எப்போது வருவார்? அருகிலுள்ள கிளினிக் எப்போது திறக்கும்? டாக்டர் வீடு எங்கிருக்கிறது? என்று விசாரித்துள்ளார்.
கோவை ஜோடி
பாட்டியும் டாக்டர் வீட்டுக்கு வழி சொன்னார்.. அவர் வழி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடினார்.. அங்கே தயாராக ஸ்கூட்டரில் இருந்த காதலியுடன் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்..
சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் ஸ்கூட்டர் நம்பரை கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து திருப்பூரை சேர்ந்த பரணிதரன் (21), நெல்லையை சேர்ந்த அவரது காதலி சிந்து (21) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
சரஸ்வதி பாட்டி
கே.ஜி.சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்த இந்த காதல் ஜோடி, காதலனின் ரூ.75 ஆயிரம் கடனை அடைக்கவும், புதிதாக சொகுசு கார் வாங்கி ஆடம்பரமாக வாழவும் நகை பறிப்பில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தின்போது முகத்தை மறைக்க கருப்பு மாஸ்க் அணிந்திருந்த பரணிதரன், ஸ்கூட்டரின் எண்ணை மறைக்க கருப்பு டேப்பையும் பயன்படுத்தியுள்ளார். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், மாஸ்க், டேப் மற்றும் சரஸ்வதி பாட்டியின் 4 பவுன் தங்கச் சங்கிலி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முதன்முறையாக குற்றத்தில் ஈடுபட்ட இந்த ஜோடி, சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் சிக்கியது..
மாணவி பரபர வாக்குமூலம்
இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவி போலீசாரிடம் நடந்த சம்பவத்தை வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து போலீஸ் தரப்பில் சொல்லும்போது, பரணிதரன் ஜாலியாக ஊர் சுற்ற தனது நண்பர்களிடம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை அடைக்கவில்லை.. ஆனால் அதற்குள் சொகுசு கார் வாங்கி ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டுள்ளனர். இந்த ஆசையை காதலியிடம் சொல்லவும், பழைய கடனை அடைத்துவிட்டு, சொகுசு கார் வாங்கிவிடலாம் என்று காதலி நம்பிக்கை தந்துள்ளார்.. இதற்காகவே பெண்களிடம் நகை பறிக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அதுமட்டுமல்ல, சிசிடிவி கேமரா இல்லாத இடங்களை இருவரும் தேடி அலைந்துள்ளனர். பிறகு, வெள்ளலூரை கறிக்கடை பஸ் நிறுத்தம் அருகே உள்ள வீட்டை தேர்வு செய்துள்ளனர்.. அங்கே சரஸ்வதியிடமும் நகையை பறித்துள்ளனர்.
அந்த நகையை உடனே விற்காமல், 2 நாட்கள் கழித்து விற்று பணமாக்கி கொள்ளலாம் என திட்டமிட்டுள்ளனர்.. ஆனால் அதற்குள் இருவரும் போலீசாரிடம் சிக்கி கொண்டார்களாம்.. காதலனின் கடனை அடைக்கவும், சொகுசு கார் வாங்கவும், இருவருமே காரில் ஜாலியாக சுற்றிவரவும், அடுத்தவர் நகையை கொள்ளையடித்துள்ளனர்.. ஆனால் முதல் கொள்ளையிலேயே, அதுவும் 24 மணி நேரத்தில் இவர்கள் சிக்கியிருக்கிறார்கள்...!!


Click it and Unblock the Notifications
