Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை கார் வெடிப்புக்கும் இலங்கை குண்டுவெடிப்புக்கும் தொடர்பு..? அசாருதீனை சிறையில் சந்தித்த முபின்?

Subscribe to Oneindia Tamil

கோவை : கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் பலியான ஜமேஷா முபினுக்கும் இலங்கையில் 2019ல் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அசாருதீனுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகை தினத்தில் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த தேவாலய குண்டுவெடிப்பு சம்பவம் போலவே தீபாவளிக்கு முந்தைய நாளில் கோவில் அருகே சிலிண்டரை வெடிக்க வைக்க திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன.

கொழும்பு தேவாலய குண்டுவெடிப்பு தொடர்பாக கைதான கோவை உக்கடத்தைச் சேர்ந்த முகமது அசாருனுடன் ஜமேஷா முபின் தொடர்பு கொண்டதாக சந்தேகிக்கப்பட்டு அப்போது என்.ஐ.ஏ விசாரணையும் அவரிடம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அசாருதீனை கேரள சிறையில் ஜமேஷா முபீன் சந்தித்ததாகவும், இலங்கை குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கும், கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

கோவை பயங்கரம்

கோவை பயங்கரம்

கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நான்கு மணியளவில், காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபீன் என்பவர் பலியானார். பழைய துணி விற்பனையாளரான ஜமேஷா முபீனின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அங்கு நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கு உதவும் பொட்டாசியம் நைட்ரேட், சல்ஃபர், அலுமினியம் பவுடர், சார்க்கோல் உள்ளிட்ட வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

5 பேர் கைது

5 பேர் கைது

ஜமேஷா முபின் வீட்டின் முன் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, சனிக்கிழமை நள்ளிரவு 11.25 மணிக்கு ஜமேசா முபீனுடன் 4 பேர் இருந்ததும், அவரது வீட்டில் இருந்து மர்ம பொருள் ஒன்றை அவர்கள் ஐந்து பேரும் தூக்கிச் சென்றதும் பதிவாகி இருந்தது. கார் வெடி விபத்து தொடர்பாக போலீசார் தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தாக்குதல்

பயங்கரவாத தாக்குதல்

இந்நிலையில், காரில் சிலிண்டர் வெடித்தது பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகித்துள்ளது. உயிரிழந்த ஜமேஷா முபீனின் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸில் சந்தேகத்திற்குரிய வாசகம் இடம்பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கோவையில் நடந்தது தற்கொலைப் படைத் தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசாரின் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

 இலங்கை சம்பவத்திற்கு தொடர்பு?

இலங்கை சம்பவத்திற்கு தொடர்பு?

இந்நிலையில் கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவத்திற்கும் இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் பிற இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

கைதான அசாருதீன்

கைதான அசாருதீன்

கொழும்புவில் 2019ல் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய புகாரில் கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது அசாருதீன் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவர் கிலாஃபா ஜிஎஃப்எக்ஸ் (KhilafahGFX) என்ற பேஸ்புக் பக்கத்தை பராமரித்து வந்தார். அதில் பயங்கரவாத கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளார். அசாருதீன் இலங்கை தற்கொலைப்படை தாக்குதில் மூளையாக செயல்பட்ட சஹ்ரான் ஹாஷிமுடன் ஃபேஸ்புக்கில் தொடர்பு கொண்டிருந்துள்ளார்.

அசாருதீனை சிறையில் சந்தித்த முபின்?

அசாருதீனை சிறையில் சந்தித்த முபின்?

அப்போது முகமது அசாருதீன் தொடர்புடைய 8 பேரும் விசாரிக்கப்பட்டுள்ளனர். அசாருதீன் உடனான தொடர்பினால் சந்தேகிக்கப்பட்ட ஜமேஷா முபீனிடமும், என்.ஐ.ஏ விசாரணை நடத்தியுள்ளது. எனினும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் கைது செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அசாருதீனை ஜமேஷா முபின் கேரள சிறையில் சந்தித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 அதேபோல திட்டம்?

அதேபோல திட்டம்?

இந்நிலையில் தற்போது ஜமேஷா முபீன் சந்தேகத்திற்குரிய வகையில் இறந்திருக்கும் நிலையில், இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதல் போலவே கோவை பகுதியில் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளில் கோவில் அருகே காரை வெடிக்க திட்டமிட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+