• search
கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவையில் இன்னும் 6 மாதத்திற்குள் குண்டு வெடிக்க வாய்ப்பு! பகீர் கிளப்பும் பாஜக வேலூர் இப்ராஹிம்!

Google Oneindia Tamil News

கோவை : கோவையில் அடுத்த ஆறு மாதத்திற்குள் மீண்டும் குண்டு வெடிக்க வாய்ப்புள்ளது. அந்த அளவிற்கு அந்த பகுதிகளில் இளைஞர்கள் உருவாகி வருகிறார்கள் என பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இஸ்லாமிய கிறிஸ்துவ மக்களின் நம்பிக்கைகளை பெற்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்காக இரட்டை இலக்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்ப வேண்டும்.

அதில் குறிப்பாக கோவை மாவட்டத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வேட்பாளராக நின்று வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அதற்கான திட்டங்களை மற்றும் முன்னேற்பாடுகளை எப்படி செய்ய வேண்டும் என்ற பல்வேறு விஷயங்களை ஆலோசித்து வருகிறோம் .

குஜராத்தில் தாமரைகள் “குஷி”.. விட்டதை பிடிக்கும் பாஜக! கவிழும் காங்கிரஸ் - 2017 தேர்தலுடன் ஒப்பீடு குஜராத்தில் தாமரைகள் “குஷி”.. விட்டதை பிடிக்கும் பாஜக! கவிழும் காங்கிரஸ் - 2017 தேர்தலுடன் ஒப்பீடு

பாஜக

பாஜக

பாஜகவை பொறுத்தவரை மிக வேகமாக சிறப்பாக இருக்கிறது என்பதை கட்சியில் உள்ள நாங்கள் சொல்வதை விட திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் அவர்களே சொல்கிறார் என்றால் அந்த அளவிற்கு இன்றைக்கு மக்களின் மனங்களில் தாமரை பதித்திருக்கிறது. எங்களுடைய மாநில தலைவர் அண்ணாமலை மிகச் சிறப்பான செயல்பாட்டின் மூலம் குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு மத்தியில் அவர் பல்வேறு உணர்ச்சி பூர்வமான நடவடிக்கைகளையும் சிறுபான்மை மக்களுக்கான நலத்திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்று எங்களை தொடர்ந்து உந்து சக்தியாக செயல்படுத்தக்கூடிய விதமும் சிறுபான்மை மக்களிடத்தில் மிகப்பெரிய நற்பெயரை பாரதிய ஜனதா கட்சிக்கு வாங்கி தந்திருக்கிறது.

வாக்கு வங்கி அரசியல்

வாக்கு வங்கி அரசியல்

திராவிட முன்னேற்றக் கழகம் காலம் காலமாக செய்யக்கூடிய வாக்கு வங்கி அரசியல் இனிமேல் தமிழகத்தில் ஈடுபடாது. நாளைய த்னம் பாபர் மசூதி இடிப்பு இனத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி,தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத கட்சியான தவ்ஹீத் ஜமாத் போன்ற கட்சிகள்
RSS அலுவலகத்தை முற்றிகையிடப் போவதாக அறிவித்துள்ளனர்.பாஜக சிறுபான்மை பிரிவு சார்பில் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் இணைந்து ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு பாதுகாப்பு கொடுப்போம். வேல்முருகன், திருமாவளவனுக்கு தைரியம் இருந்தால் எங்களை தடுத்து பார்க்கட்டும்

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

முற்றுகை இடும் உங்களை சிதறடிப்போம். ஜனநாயக ரீதியில் நாங்களும் அத்துமீறுவோம். தமிழக காவல்துறை திமுக ஆட்சியில் திறனற்று உள்ளது. மக்களின் உரிமைகளுக்காக போராடினால் திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கிறார்கள். திருமாவளவன் பட்டியலின மக்களின் துரோகி. தீவிரவாதிகளின் புகழிடமாக இருக்கும் இடங்களை நாங்கள் மாற்றுவோம். கூமுட்டைகளும், ஊழல்வாதிகளும் தான் தற்போது திமுக அமைச்சர்களாக உள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் இடங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரசாரம் செய்கிறார்கள்

கோவையில் குண்டு

கோவையில் குண்டு

மத்திய அரசின் திட்டங்கள் குறித்து இஸ்லாமிய இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சென்றால் எங்களை கைது செய்கிறார்கள். கோவை ஆட்சியர் மத்திய அரசின் திட்டங்களில் எத்தனை திட்டங்களை மக்களுக்காக கொண்டு சேர்த்துள்ளார் என்பதை கூற வேண்டும். கோவையில் அடுத்த ஆறு மாதத்திற்குள் மீண்டும் குண்டு வெடிக்க வாய்ப்புள்ளது.அந்த அளவிற்கு அந்த பகுதிகளில் இளைஞர்கள் உருவாகி வருகிறார்கள். ஜனநாயக ரீதியில் இஸ்லாமிய மக்களை அணுக காவல்துறை அனுமதிக்க வேண்டும். வாக்கு வங்கிக்காக கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் இஸ்லாமியர்களை பயன்படுத்துகின்றன

சிலிண்டர் வெடிப்பு

சிலிண்டர் வெடிப்பு

காவல்துறையை கையில் வைத்துள்ள ஸ்டாலின் அதனை ஏவல் துறையாக பயன்படுத்துகின்றார். தமிழகத்தில் காவல்துறையும், உளவுத் துறையும் பூஜ்ஜியம். கோவை காவல்துறை மத நல்லிணக்கத்திற்கு எதிராக உள்ளது. கர்நாடகாவில் குக்கர் குண்டு வெடிப்பு குறித்து பாஜக விமர்சனம் செய்யவில்லை என கூறுகின்றனர்.அதே வேளையில் அங்கு நடைபெற்ற சம்பவத்தை அம்மாநில அரசும் காவல்துறையும் நடந்தது குண்டு வெடிப்பு என உறுதிபட கூறியது. ஆனால் கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை அமைச்சர் செந்தில் பாலாஜியும் தமிழக அரசும் சிலிண்டர் வெடிப்பு என்றே கூறுகிறது" என கடுமையாக விமர்சித்தார்.

English summary
Coimbatore is likely to explode again within the next six months. To such an extent, youths are forming in those areas, National Secretary of BJP Minority Wing, Velur Ibrahim has created a stir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X