முகநூலில் பழகிய ஆண் நண்பர்.. தனியாக ரிசார்ட்டுக்கு வரவழைத்த பெண்.. நடந்த ட்விஸ்ட்.. மிரண்ட் கோவை!
கோவை: முகநூலில் பழகி இளைஞரிடம் பண வேட்டையில் ஈடுப்பட்ட பெண் உட்பட இரண்டு பேர் கோவை போலீசாரிடம் சிக்கி உள்ளனர். கைதான பெண், தனது நண்பர்களுடன் இணைந்து ஆண் நண்பரை ரிசார்ட்டுக்கு வர வைத்து மிரட்டி பணத்தை பிடுங்கி துரத்தி அனுப்பி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கோவை மாவட்டம், தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரே பள்ளியில் பயின்ற நண்பர்களான ஆண், பெண் இருவரும் தற்போது முகநூல் மூலம் பழகி வந்துள்ளனர். அந்த வாலிபர் திருமணம் ஆனவர்.
இந்நிலையில் அவசர செலவுக்கு அந்த பெண் அவ்வாலிபரிடம் ரூபாய் 23,000த்தை பெற்றுள்ளார். மேலும் இருவரும் முகநூலில் தங்களது புகைப்படங்களை பரிமாற்றம் செய்தும் ,பேசியும் வந்துள்ளனர்.

ஆயுதங்களுடன் காத்திருந்தனர்
இந்நிலையில் அந்த இளம் பெண், வாலிபரை தனியாக சந்திப்பதற்காக ஆனைக்கட்டியில் ஒரு ரிசார்ட்க்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்தப் பெண் தனது ஆண் நண்பர்கள் இருவரை (அப்துல்கலாம்(25), ஆபீப் அலி(23)) ஆயுதங்களுடன் வரவழைத்துள்ளார்.

துரத்தினர்
மூவரும் சேர்ந்து அந்த வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். வாலிபர் அவரிடம் அப்போது இருந்த பணத்தை கொடுத்துவிட்டு மீதி தொகையை இரண்டு நாள் கழித்து கொடுப்பதாக கூறி வீடு திரும்பியுள்ளார்.

3 பேரும் கைது
இது குறித்து அந்த வாலிபர் தடாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பணம் பறித்த அந்தப் பெண்ணையும், அவரது கூட்டாளிகள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புகார் தர கோரிக்கை
கோவை மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இது தொடர்பாக கூறுகையில் முகநூலில் பழகி பணம் கேட்டு மிரட்டினால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் அல்லது 77081-00100 அல்லது 94981-81212 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

போலி ஐடிக்களில் மோசடி
ஏற்கனவே தெரிந்தவர்களின் பெயரில் அவசர தேவைக்கு பணம் தேவை என்று முகநூலில் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பேக் ஐடிக்கள் உருவாக்கப்பட்டு மிகப்பிரபலமானவர்களை குறிவைத்து பணம் பறிக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே முகநூலில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். முகநூலில் பணம் கேட்டால் யாருக்கும் தரக்கூடாது. ஏனெனில் அப்படி வந்தால் நிச்சயம் பேக் ஐடிக்களாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications