தாய்மையை வைத்து ரீல்ஸ் போட சொன்னாரா விஜய்? தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுகவின் வைஷ்ணவி கேள்வி!

Subscribe to Oneindia Tamil

கோவை: சென்னை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கைக்குழந்தையுடன் பங்கேற்ற தவெக எம்எல்ஏ பல்லவியின் செயலை திமுக பிரமுகர் வைஷ்ணவி விமர்சித்துள்ளார். இரண்டு முதல் நான்கு மணி நேர ஆய்வுக் கூட்டத்திற்குக் கூட குழந்தையைப் பார்த்துக்கொள்ள மாற்று ஏற்பாடு இல்லையா என்று கேள்வி எழுப்பிய வைஷ்ணவி, பெண்கள் போற்றும் தாய்மையை வைத்து ரீல்ஸ் போட்டு மக்களை ஏமாற்ற சொன்னாரா உங்கள் விஜய் அண்ணா? என்றும் சாடியுள்ளார்.

ரிப்பன் மாளிகையில் சென்னை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் குழுவின் தலைவர் தயாநிதி மாறன், மேயர் பிரியா, எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, வில்சன், பிரவீண் சக்கரவர்த்தி, எம்எல்ஏ-க்கள் சேகர்பாபு, பல்லவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் தவெக எம்எல்ஏ பல்லவி தனது கைக்குழந்தையுடன் பங்கேற்று இருந்தார்.

Vaishnavi

ஏற்கனவே சட்டசபை, விஜய்யின் ரோடு ஷோ, அரசு நிகழ்ச்சிகள், பிரதமர் மோடி நிகழ்ச்சி என்று பல்வேறு கூட்டங்களிலும் பல்லவி தனது கைக்குழந்தையுடன் பங்கேற்று இருந்தார். அது சோசியல் மீடியாவில் கடுமையான விமர்சனங்களை பெற்றது. கைக்குழந்தையை நீண்ட நேரம் பொது நிகழ்ச்சியில் அமர்ந்திருப்பதை பல்லவி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பலர் அறிவுறுத்தினர்.

இதனிடையே நேற்று எம்எல்ஏ பல்லவி தனது குழந்தையுடன் மேயர் பிரியா அருகில் அமர்ந்திருந்தார். இதனை வைத்து யூடியூப் மற்றும் இதர சோசியல் மீடியாவில் ரீல்ஸ் டிரெண்டாகியது. இதனை தவெகவினர் அதிகளவில் பகிர்ந்து வந்தனர். இந்த நிலையில் திமுகவின் ஐடி விங் நிர்வாகி வைஷ்ணவி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை எழுதியுள்ளார்.

அதில் வைஷ்ணவி, கைக்குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு, ஆயிரக்கணக்கான பெண்கள் தினமும் 8 - 10 மணி நேரம் வேலைக்குச் செல்கிறார்கள். குழந்தையைப் பார்த்துக்கொள்ள குடும்பத்தினர் உதவுகிறார்கள். சிலர் குழந்தைப் பராமரிப்பு மையங்களை நாடுகிறார்கள். ஆனால், விஜய் அண்ணனின் தங்கையாகச் சொல்லப்படும் மக்கள் பிரதிநிதி பல்லவி, ஆய்வுக் கூட்டத்திற்குக் கைக்குழந்தையுடன் வருகிறார்.

இரண்டு முதல் நான்கு மணி நேர ஆய்வுக் கூட்டத்திற்குக் கூட குழந்தையைப் பார்த்துக்கொள்ள மாற்று ஏற்பாடு இல்லையா? இல்லை பெண்கள் போற்றும் தாய்மையை வைத்து ரீல்ஸ் போட்டு மக்களை ஏமாற்ற சொன்னாரா உங்கள் விஜய் அண்ணா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். வைஷ்ணவியின் பதிவி சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

மதுராந்தகத்தில் விஜய்யின் ரோடு ஷோவில் பல்லவி கைக்குழந்தையுடன் பங்கேற்று இருந்தார். அப்போதே விஜய் கைக்குழந்தையுடன் இங்கு வரலாமா என்று சிக்னல் காட்டி கேள்வி எழுப்பினார். பொதுவெளியில் கைக்குழந்தையுடனே பல்லவி வலம் வருவது தவெகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+