குழந்தைகளை தாக்கும் புது வைரஸ்கள்.. காய்ச்சல்ன்னா அலட்சியம் வேண்டாம்! பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?
கோவை: புதிய புதிய வைரஸ்களால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதால் பெற்றோர் விழிப்புடன் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், 2020, 2021 ஆகிய 2 ஆண்டுகள் தீவிரமாக இருந்தன. அதன் பின்னர் அதன் பாதிப்பு படிப்படியாக குறைந்தது.
கொரோனா பாதிப்பு முழுமையாக நாட்டை விட்டு ஒழியாவிட்டாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தாத வகையில் இருந்து வருகிறது. அந்த கொரோனாவிலும் எத்தனை வகை? அதன் பெயர்களை கூறுவதற்கு மக்கள் சற்று தடுமாற்றத்தை சந்தித்தனர்.

வைரஸ்
ஒவ்வொரு வைரஸுக்கும் இடையே எத்தனை வித்தியாசங்கள்? தோற்றத்திலும் சரி, நோயாளிக்கு உண்டாகும் உடல்நல பாதிப்புகளும் சரி வித்தியாசமாகவே இருந்தது. குரங்கு அம்மை எனும் வைரஸ் வந்தது. இது ஓரின சேர்க்கையால் பரவுவதாக சொல்லப்பட்டது. பின்னர் தக்காளி வைரஸ் வந்தது.

தலை முதல் கால் வரை தக்காளி வைரஸ்
இந்த வைரஸ் பாதித்தால் தலை முதல் கால் வரை தக்காளி போல் குட்டி குட்டி கட்டிகளாக வீங்கும். இப்படி ஒன்று போய் மற்றொன்று, அது போய் வேறொன்று என ஆண்டுகணக்கை ஓட்டிய நிலையில் தற்போது டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை கண்டுகொள்ளாமல் விட்டால் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைந்து உயிரிழப்பு வரை செல்லக் கூடிய அபாயம் உள்ளது.

என்னென்ன நோய்கள்
தற்போது குழந்தைகள் புதிய வைரஸ்களால் தாக்கப்படுகிறார்கள். ரெஸ்பரேட்டரி சின்செசியல் வைரஸ், ப்ளூ காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் பல்வேறு வைரஸ்களால் குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிகளில் குழந்தைகள் பக்கத்தில் உட்காருவது, விளையாடுவது, ஒரு குழந்தைக்கு நோய் பாதிப்பு இருந்தால் மற்றொரு குழந்தைக்கு தொற்றும்.

நோய் பாதிப்பு
எனவே பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி கட்டாயம் முகக் கவசம் அணிவிக்க வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவும் பழக்கத்தை அறிவுறுத்த வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஒரு குழந்தை எச்சில் செய்த உணவை இன்னொரு குழந்தைக்கு பகிர கூடாது. தண்ணீர் பாட்டில்களை மாற்றி குடிக்கக் கூடாது. குழந்தைகள் வீட்டிற்கு வந்தவுடன், குளிக்க வைத்துவிட வேண்டும். இது போன்ற சுகாதார முறைகளை கடைபிடிக்க வேண்டும். பெரும்பாலான வைரஸ்கள் சாதாரண சளி, காய்ச்சல் போல் இருந்தாலும் மூச்சுக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தி மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. குழந்தைகளுக்கு சரியாக தடுப்பூசிகளை போட வேண்டும். சுய மருத்துவம் செய்யவே கூடாது. சளி, காய்ச்சல் , இருமல் 3 நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications