கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"எவ்வளவு வனப்பகுதி ஆக்கிரமிக்கபட்டுள்ளது" கோவையில் களமிறங்கிய அமைச்சர் ராமச்சந்திரன்.. திடீர் ஆய்வு

Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்: கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன காவலர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு முக்கியமான வனப்பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக நிறைய புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. வனப்பகுதிகளை முறையின்றி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக நீண்ட காலமாக புகாரும், குற்றச்சாட்டும் வைக்கப்பட்டு வருகின்றன.

8 அடி ராஜநாகம்கூட இவருக்கு ஜுஜுபி தான்.. லாவகமாக பாம்பு பிடித்து அசத்தும் ஒடிசா பெண்!8 அடி ராஜநாகம்கூட இவருக்கு ஜுஜுபி தான்.. லாவகமாக பாம்பு பிடித்து அசத்தும் ஒடிசா பெண்!

இந்த தொடர் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து இன்று கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திடீரென ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனை

ஆலோசனை


இந்த ஆலோசனை மற்றும் ஆய்வின்போது வனத்துறைக்கு சொந்தமான இடங்கள் எங்கெங்கு உள்ளது. மேலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்கள் எவை என்பது குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். ஆக்கிரமிப்பு நிலங்கள் எங்கெல்லாம் இருக்கிறது, அதன் விவரங்கள் என்ன என்பது குறித்த முழு பட்டியலை அமைச்சர் ராமச்சந்திரன் இந்த ஆய்வில் கேட்டு இறுக்கினார்.

பறிமுதல்

பறிமுதல்

ஆக்கிரமிப்பு நிலங்கள் மீது தேவையான நடவடிக்கைகள் எடுத்து அந்த நிலங்களை மீட்டு மீண்டும் வனத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று அவர் ஆலோசனையில் குறிப்பிட்டார். அதனை தொடர்ந்து கோவை கோட்டத்தில் வனத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்கள் துப்பாக்கிகள் மற்றும் இதர பொருட்கள் குறித்து ஆய்வு நடத்தினார். வனவிலங்குகளை காட்டுக்குள் விரட்ட பயன்படுத்தப்படும் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு

ஆய்வு

அந்த ஆய்வின் போது உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். எந்த வித காரணம் கொண்டும் வனவிலங்குகள் துன்புறுத்தக்கூடாது என்று உத்தரவிட்டார். மேலும் வனத்துறைக்கு சொந்தமான இடங்களை யாராயினும் ஆக்கிரமிப்பு செய்தால் எந்தவித பாரபட்சமும் இன்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டுப்பகுதியை அதிகப்படுத்துவதே நமது நோக்கம் என்று அவர் அதிகாரிகளுடன் கண்டிப்புடன் குறிப்பிட்டுள்ளார்.

 கோவை .

கோவை .

மேலும் குறிப்பாக யானைகள் துன்புறுத்தப் படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் மேலும். அவ்வாறு யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் அதற்கு காட்டுப் பகுதியை ஒட்டி உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து தகவல் பரிமாற்றம் என்ற அமைப்பு உள்ளது அதனை பயன்படுத்தி வன விலங்குகளை விரட்டும் பணியை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் ராமச்சந்திரன் ஆலோசனையில் குறிப்பிட்டார்.

English summary
Tamilnadu Forest minister Ramachandran wants a report on Coimbatore forest encroachment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X