கோவை லேடீஸ் ஹாஸ்டல் உரிமையாளர் வீட்டில் ரூ. 50 லட்சம் தங்கம்.. 3 வருடமாக மெல்ல மெல்ல.. ட்விஸ்ட்
கோவை: கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் செல்லதுரை என்பவர் சென்னை எழும்பூரில் சொந்தமாக மகளிர் விடுதி நடத்தி வருகிறார். இதற்காக அவர் மட்டும் தனியாக சென்னையில் வசிக்கிறார்.அவரது குடும்பத்தினர் தான் குனியமுத்தூரில் வசிக்கிறார்கள். இந்நிலையில் சென்னையில் இருந்து வீட்டு உள் அலக்கார வேலைக்காக சுரேஷ் என்பவரை செல்லதுரை அனுப்பி வைத்தார். அதன்படி வந்த சுரேஷ், விடுதி உரிமையாளர் வீட்டில் ரூ.50 லட்சம் நகை மற்றும் பணம் திருடிவிட்டதாக கூறப்படுகிறது. அவர் எப்படி சிக்கினார் என்பதை பார்ப்போம்.
நம்பி வேலைக்கு அனுப்பும் போது, நம்பிக்கை துரோகம் செய்தால் என்னாகும்.. அப்படித்தான் கோவையில் விடுதி உரிமையாளர் வீட்டில் உள்அலங்கார வேலை செய்யும் தொழிலாளி செய்திருப்பதாக கூறப்படுகிறது. கோவை குனியமுத்தூரை சேர்ந்த 27 வயதாகும் செல்லதுரை என்பவர் சென்னை எழும்பூரில் சொந்தமாக மகளிர் விடுதி நடத்தி வருகிறார். இதற்காக அவர் குடும்பத்தை பிரிந்து சென்னையில் தங்கி உள்ளார்.

செல்லத்துரையின் குடும்பத்தினர் கோவை குனியமுத்தூரில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை எழும்பூரை சேர்ந்த வீட்டு உள்அலங்கார வேலை செய்யும் 33 வயதாகும் சுரேஷ் என்பவர் செல்லதுரைக்கு அறிமுகம் ஆகியுள்ளார். அவர், செல்லதுரையின் விடுதியில் சில அலங்கார வேலைகளை செய்திருக்கிறார். அந்த வேலைகள் பிடித்துப் போனதால் செல்லதுரை, சுரேசை குனியமுத்தூரில் உள்ள தனது வீட்டில் சில வேலைகளை செய்யுமாறு அனுப்பி வைத்துள்ளார்.
அதன்படி சுரேஷ், சென்னையில் இருந்து அவ்வப்போது குனியமுத்தூருக்கு வந்து செல்லதுரையின் வீட்டில் அலங்கார வேலை செய்து கொடுத்தார். அப்போது வீட்டில் யாருமே இல்லாத நேரத்தில் சுரேஷ், பீரோவை திறந்து பார்த்தாராம். அதில் அதிகளவில் பணம் மற்றும் நகை இருந்துள்ளது. ஒரே நேரத்தில் திருடினால் தன் மீது சந்தேகம் வந்துவிடும் என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக திருட திட்டமிட்டார். அதன்படி அவர் கடந்த 3 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக 40 பவுன் நகை, ரூ.21 லட்சம் ஆகியவற்றை திருடியதாக கூறப்படுகிறது. அதன் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பீரோவில் இருந்த நகை-பணம் திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்லதுரை குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கோவை மாநகரம்ட குனியமுத்தூர் உதவி கமிஷனர் அஜய் தங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
குனியமுத்தூர் போலீசார் நடத்திய விசாரணையில், செல்லதுரை வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக நகை, பணத்தை கொள்ளையடித்தது இன்டீரியர் டிசைனர் சுரேஷ் என்பது தெரிய வந்தது. உடனே போலீசார் சென்னையில் பதுங்கி இருந்த சுரேசை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.50 லட்சம் நகை மற்றும் பணம் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
Gold Price Today: 3 நாள் உயர்வுக்கு பிரேக்.. இன்று குறைந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு? -
அடுத்தடுத்து ஆப்பு வைத்த மோடி அரசு! கூனிக்குறுகுது கோவை! புண்படுத்திகிட்டே இருக்கீங்களே! என்னாச்சு? -
Gold Price Today: தங்கம் விலை இன்றும் அதிரடி உயர்வு.. தொடர்ந்து 3 நாட்களாக அதிகரிப்பு! சென்னையில் ஒரு சவரன் என்ன ரேட்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி!












Click it and Unblock the Notifications