17 வயது மாணவனிடம் அத்துமீறிய 27 வயது இளம் பெண்.. கடைசியில் கணவனுக்கு கனவிலும் நினைக்காத ட்விஸ்ட்
கோவை: இன்றைக்கு 18 வயது நிரம்பாத இளம் மாணவிகள், 21 வயது கூட நிரம்பாத இளைஞர்களுடன் காதலில் விழுந்து வீட்டை விட்டு ஓடுகிறார்கள். சட்டப்படி இந்த திருமணங்கள் செல்லாது என்றாலும் அடிக்கடி இதுபோன்ற மைனர்கள் திருமணம் செய்வது நடக்கிறது. அதேபோல் அபூர்வமாக சில இளம் பெண்கள், தன்னைவிட வயது குறைந்த 18 வயது நிரம்பாத சிறுவர்களுடன் ஓடிப்போகும் சம்பவங்களும் நடக்கும்.. அப்படி ஒரு சம்பவம் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் நடந்துள்ளது.
ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்ய விரும்பினால், அவர்களுக்கு சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட திருமண வயது இருக்க வேண்டும். ஆணுக்கு குறைந்தபட்சம் 21 வயது இருக்க வேண்டும். பெண்ணுக்கு குறைந்தபட்சம் 18 வயதும் பூர்த்தியாகியிருக்க வேண்டும். ஆனால் இது தெரியாமல் பள்ளியில் படிக்கும் போது காதலிக்கும் சிலர், பள்ளிப்படிப்பை முடிக்கும் போது ஓடிப்போகும் சம்பவங்கள் நடக்கிறது. 21 வயது நிறைவு பெறாத எந்த ஆணும் திருமணம் செய்து கொள்ள முடியாது என்கிற நிலையில், சிலர் காதல் என்ற பெயரில் திருமணம் செய்து வாழ்க்கையை தொலைக்கிறார்கள்.

அதேபோல் தான், 18 வயது நிறைவு பெறாத இளம் சிறுமிகள், வாழ்க்கை துணையை தேடிக்கொண்டு பெற்றோரை எதிர்க்கிறார்கள். வாழ்க்கையில் எப்படி வாழ வைப்பான், அவனால் பொருளாதார ரீதியாக பலமாக செயல்பட முடியுமா, நல்ல ஒழுக்கம் உள்ள பையனா என எதையும் பார்க்காமல் அவசரப்பட்டு வாழ்க்கையை தொலைப்பது அதிகம் நடக்கிறது. அதேபோல் திருமணம் ஆன சில பெண்கள், இளம் வயது சிறார்களின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, குழந்தைகளை தவிக்கவிட்டு,கணவனை விட்டு ஓட்டம் பிடிப்பது நடக்கிறது. அப்படி ஒருசம்பவம் கேரளாவின் ஆலப்புழாவில் நடந்துள்ளது
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலா பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் 17 வயதுடைய மாணவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானான். இதேபோல சனுஷா (வயது27) என்ற இளம்பெண்ணும் மாயமானார். சனுஷாவுக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.இருவரும் மாயமானது தொடர்பாக புகாரின்பேரில் சேர்த்தலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது இளம்பெண் சனுஷா, மாணவனை அழைத்துக் கொண்டு வீட்டைவிட்டு ஓடிப்போனது தெரியவந்தது. போலீசாரின் தொடர் விசாரணையில் அவர்கள் கர்நாடகா மாநிலம் கொல்லூரில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் கொல்லூருக்கு சென்று இருவரையும் சேர்த்தலாவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் சனுஷாவுக்கு பள்ளி மாணவருடன் பழக்கம் இருந்துள்ளது. இதையடுத்து அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவரை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி கொல்லூருக்கு சென்றது தெரியவந்தது. தொடர்ந்து மாணவனை கடத்தி சென்ற சனுஷா மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இளம்பெண்ணிடம் இருந்து மீட்கப்பட்ட மாணவனுக்கு போலீசார் அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications