Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஓட்டு போட்டா தான் கோவைக்கு மெட்ரோ ரயிலா".. பாஜகவுக்கு சாட்டை அடி கேள்வி

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இதற்கு பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த தேர்தலில் NDA கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் முறையான அறிக்கை தயார் செய்யப்பட்டு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதற்கு மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் ஈஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவை மக்களை பிளாக் மெயில் செய்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் வே.ஈஸ்வரன் கூறியுள்ளதாவது: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பாஜக மகளிர் அணி செயலாளர் மதிப்பிற்குரிய வானதி சீனிவாசன் அவர்கள் மெட்ரோ ரயில் திட்டம் குறித்து இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள காரணங்களையும் அதன் உண்மைகளையும் விளக்குவது நமது கடமையாகும்.

metro-rail-come-to-coimbatore-only-if-we-vote-for-the-nda-alliance-question-to-bjp

1) முறையான வகையில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படவில்லை

முறையான வகையில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படவில்லை எனில் மத்திய அரசு அதிகாரிகள் இந்தத் திட்ட அறிக்கையை முறையாக சமர்ப்பிக்க உதவி செய்திருக்க வேண்டும். மத்திய அரசு அதிகாரிகளை அனுப்பி தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் கலந்தாலோசத்திருக்க வேண்டும். கோவை என்பது இந்தியாவில் தானே இருக்கிறது. கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வர வேண்டும் என்பது மத்திய மாநில அரசு இரண்டிற்கும் பொறுப்பு உண்டு அல்லவா. இதை ஏன் செய்யவில்லை.

2) அடுத்து வருகின்ற தேர்தலில் NDA கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் முறையான அறிக்கை தயார் செய்யப்பட்டு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார். எங்கள் கூட்டணிக்கு ஓட்டு போட்டால் தான் மெட்ரோ ரயில் திட்டம் வரும் என்று கோவை மக்களை பிளாக் மெயில் செய்கிறீர்களா. இது அடிப்படை ஜனநாயகத்திற்கு எதிரானது என்று பாரதிய ஜனதா கட்சியும் வானதி சீனிவாசனும் உணர்ந்திருக்கிறார்களா. திமுக ஆட்சியிலும் முறையான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு உதவி செய்து உடனடியாக மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி பெறுவதற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்.

3) திட்ட அறிக்கை தவறு என்று மத்திய அரசு தனது அறிக்கையில் தெரிவிக்கவில்லை. தொழில்நுட்ப காரணங்களையும் தெரிவித்துள்ளார்கள். அந்தத் தொழில்நுட்ப காரணங்களை நிவர்த்தி செய்வது எளிதானது. மத்திய அரசு தனது அறிக்கையில் எந்த இடத்திலும் திட்ட அறிக்கைக்கு விளக்கம் தந்து மீண்டும் திட்டத்தை சமர்ப்பியுங்கள் என்று சொல்லவில்லை.

4) முக்கிய கடைகள் அகற்றும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு இருப்பதாக வானதி அவர்கள் கூறியிருக்கிறார்கள். மெட்ரோ ரயில் திட்டம் வந்தால் அருகில் இருக்கின்ற கடைகளுக்கு பாதிப்பு ஏற்படத்தான் செய்யும். எல்லா இடங்களிலும் இதுதான் நடக்கும். ஒட்டுமொத்த மாநகரத்திற்கும் நன்மை பயக்கும் எனில் அருகில் இருக்கின்ற இடங்களை எடுப்பது தவிர்க்க முடியாதது.

வானதி சீனிவாசன் கடைகளுக்கு ஆதரவாக பேசுகிறார்களா அல்லது கோவை மக்களுக்கு ஆதரவாக பேசுகிறார்களா என்று தெரியவில்லை. மெட்ரோ ரயில் திட்டம் வருகின்ற வழித்தடத்தில் இரு பக்கமும் நிலங்களை கையகப்படுத்தி கொடுப்பது மாநில அரசின் வேலை. அதை மாநில அரசே செய்கின்ற ஒரு நிலையில் மத்திய அரசுக்கு இதில் என்ன கவலை.

டெல்லி மெட்ரோ, சென்னை மெட்ரோ போன்ற திட்டங்கள் செயல்படுத்தும் போது கடைகள் எதுவும் எடுக்கப்படவில்லையா. சென்னை ரயில் நிலையத்திற்கு அருகிலே இருந்த மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் கூட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக எடுக்கப்பட்டது.

4) ஆக்ரா முக்கியமான சுற்றுலா தளம் என்பதால் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் அங்கு அனுமதி கொடுக்கப்பட்டது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் மெட்ரோ ரயில் திட்ட கொள்கை 2017 ன் படி சுற்றுலா தலங்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்று ஏதாவது குறிப்பிடப்பட்டுள்ளதா. ஆக்ராவிற்கு ஆதரவாக பேசுகின்ற வானதி சீனிவாசன் தான் வெற்றி பெற்ற கோவை மக்களுக்கு ஆதரவாக ஏன் பேசவில்லை.

கோவை முக்கியமான தொழில் நகரம், கல்வி நகரம், மருத்துவ நகரம், மென்பொருள் நகரம் என்பதால் ஆக்ராவிற்கு அனுமதி வழங்கப்பட்டது போல கோவைக்கும் அனுமதி வழங்கப்படுவதற்கு மத்திய அரசை வலியுறுத்துவேன் என்று ஏன் சொல்லவில்லை.

5) பாட்னாவில் முனிசிபாலிட்டி பகுதியும் மெட்ரோ ரயில் திட்டத்தில் இணைக்கப்பட்டதால் அங்கு அனுமதி வழங்கப்பட்டது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் மெட்ரோ ரயில் திட்ட அறிவிப்பு 2011 இல் அருகில் இருக்கின்ற பகுதிகளையும் இணைத்துத்தான் கோவையை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த வாய்ப்புள்ள நகரமாக அறிவித்தார்கள். அதனால் இது ஒரு பெரிய பிரச்சனை இல்லை.

அருகில் உள்ள பகுதிகளையும் ஆய்வு செய்து அனுமதி வழங்குகிறோம் என்று மத்திய அரசு குறிப்பிட்டிருக்கலாம். ஆனால், அது குறித்து எந்த கருத்தையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை.

6) கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி வழங்க பல்வேறு தொழில்நுட்ப காரணங்களை மத்திய அரசு கூறியுள்ளது அந்த தொழில்நுட்ப காரணங்களை நிவர்த்தி செய்வது பெரிய பிரச்சனை இல்லை. ஆனால், மக்கள் தொகையை காரணம் காட்டி இந்தத் திட்டத்தை மறுத்தால் மக்கள் தொகையை அதிகமாக காட்ட இயலாது. அதனால், மத்திய அரசின் இந்த காரணத்தை ஏற்றுக் கொள்ள இயலாது.

மத்திய அரசு 2011 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்டங்களை இரண்டாம் நிலை நகரங்களுக்கு அறிவித்த போது கொச்சி பாட்னாவை விட கோவையின் மக்கள் தொகை அதிகம் அந்த காலகட்டத்தில் கோவையை சுற்றியுள்ள புறநகர் பகுதி மக்கள் தொகையையும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு சேர்த்துள்ளார்கள்.

தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காகவும் கோவை மக்களை ஏமாற்றுவதற்காகவும் ஒரு தெளிவில்லாத பேட்டியை வானதி சீனிவாசன் அளித்துள்ளார்கள். இது முற்றிலும் புறக்கணிக்கத்தக்கது. உண்மையிலேயே கோவை மக்கள் மீது கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அக்கறை இருக்குமானால் உடனடியாக மத்திய அரசிடம் வலியுறுத்தி கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி பெற்றுத் தர வேண்டும்.

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக 2012 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன். 14 ஆண்டுகளுக்குப் பிறகு இதை மறுத்ததை கோவை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மக்கள் தொகை தான் பிரச்சனை என்றால் திட்ட அறிக்கை கொடுத்ததும் உடனடியாக திருப்பி அனுப்பி இருக்க வேண்டும். மக்கள் தொகை என்பது வெளிப்படையானது. ஆனால், திட்ட அறிக்கை வைத்துக் கொண்டு 18 மாதங்கள் காலம் கடத்தி இப்போது மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியது கோவை மக்களுக்கும், மதுரை மக்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் பாரதிய ஜனதா கட்சி செய்யும் துரோகம் ஆகும்.

அதனால், கோவை மக்கள் மீது உண்மையான அக்கறை வானதி சீனிவாசன் அவர்களுக்கு இருக்குமானால் உடனடியாக இந்த திட்டத்திற்கு அனுமதி பெற்று தர வேண்டும். எந்த ஆட்சி இருந்தாலும் கோவைக்கு இந்த திட்டத்தை பெற்று தருவது பாரதிய ஜனதா கட்சியினுடைய மகளிர் அணி செயலாளர் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் அடிப்படை கடமையாகும். இதனை அவர் உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+