படுக்கையறையில் மனைவியுடன் இளைஞன்! ஷாக்கான கணவன் செய்த கொடூரம்.. சோகத்தில் முடிந்த 8 வருஷ காதல்
கோயம்புத்தூர்: நடத்தையில் சந்தேகம் காரணமாக தனது மனைவியை கணவர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ள சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தமான் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய பெற்றோர் உயிரிழந்துவிட்ட நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் இவரை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். பள்ளி படிப்பை புதுக்கோட்டையில் முடித்த கல்லூரிக்கு போகாமல் சில ஆண்டுகள் புதுக்கோட்டையிலேயே இருந்துள்ளார். இதனையடுத்து 12 ஆண்டுகளுக்கு முன்னர் கணேசன் கோவை அன்னூருக்கு வேலை தேடி வந்திருக்கிறார். அங்கு பஞ்சு மில் ஒன்றில் லோடு ஆட்டோ ஓட்டும் வேலை கிடைத்திருக்கிறது.

இந்த வேலையை செய்து வந்தபோது இவருக்கும் அதே மில்லில் வேலை பார்த்து வந்த நிவேதாவுக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. பின்னர் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். தொடக்கத்தில் வாழ்க்கை நன்றாகதான் சென்றுக்கொண்டிருந்தது. விடுமுறை நாட்களில் வெளியில் ஊர் சுற்றுவதும், கிடைக்கும் வருமானத்தை கொண்டு வாழ்வதும் என வாழ்கை காதல் நிரம்பியதாக பயணித்திருக்கிறது. இப்படி இருக்கையில்தான் இவர்களுக்கு முதல் குழந்தை பிறந்திருக்கிறது. பொறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகியுள்ளன. அதேபோல இரண்டு ஆண்டுகள் கழித்து இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது.
இதனால் மேலும் பொறுப்புகள் அதிகமாகியுள்ளன. ஆனால் குடும்பத்திற்கான வருமானம் போதவில்லை. போதிய வருமானம் இல்லாததால் பிரதான செலவுகளுக்கு கடன் வாங்க தொடங்கியுள்ளனர். வாங்கிய கடனை அடைக்க வேறு ஒரு இடத்தில் கடன் என வாழ்க்கை கடனிலேயே சென்றுக்கொண்டிருந்துள்ளது. ஒரு கட்டத்தில் நிலைமையை சமாளிக்க முடியாத கணேசன் குடிபழக்கத்தை கையில் எடுத்திருக்கிறார். இந்த குடி இவரை தீவிரமாக ஆக்கிரமித்திருக்கிறது. சரியாக வேலைக்கு போகாமல் குடித்துவிட்டு வீட்டிலும் இருக்காமல் வெளியில் சுற்றி வந்திருக்கிறார். இதனால் ஏராளமான பிரச்னைகள் உருவாகியுள்ளன.
மறுபுறம் கணேசனை நம்பி வந்த நிவேதாவுக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் சந்தோஷமும் இல்லை, அடிப்படை தேவைகளுக்கு கூட வருமானம் இல்லை என்பதால் கணேசனிடம் சண்டை போட்டிருக்கிறார். ஆனால் எவ்வளவுதான் சண்டை போட்டாலும் கணேசன் குடியை விடுவதாக தெரியவில்லை. இப்படி இருக்கையில்தான் இதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு இளைஞருடன் நிவேதாவுக்கு நட்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் இருக்கும் நெருக்கடியிலிருந்து தன்னை விடுவிக்கும் நபராக அந்த இளைஞரை நிவேதா நினைத்திருக்கிறார்.
இதனால் அவரை அடிக்கடி தனிமையில் சந்தித்திருக்கிறார். இந்த பழக்கம் இவர் இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவாக வளர்ந்திருக்கிறது. தொடக்கத்தில் இந்த விவகாரம் கணேசனுக்கு தெரியாமல் இருந்த நிலையில், கொஞ்ச நாட்களிலேயே கணேசன் இதனை கண்டுபிடித்துவிட்டார். பின்னர் நிவேதாவுக்கு வார்னிங் கொடுத்திருக்கிறார். ஆனால் நிவேதா அதை கேட்கவில்லை. இப்படி இருக்கையில் இவர்களுக்கு இடையில் இருக்கும் சண்டையை தீர்த்து வைக்க நிவேதாவின் தாய் சரோஜா இவர்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார். இதனால் பிரச்னை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்திருக்கிறது.
நேற்று நிவேதாவின் தாய் சரோஜா தனது பேரக்குழந்தைகளை அழைத்துக்கொண்டு கடை தெருவுக்கு வந்திருக்கிறார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட நிவேதாவின் காதலன் இவர்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார். இருவரும் தனிமையில் இருந்திருக்கின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக கணேசன் வீட்டிற்குள் நுழையவே இதனை எதிர்பார்க்காத நிவேதாவின் காதலன் வீட்டிலிருந்து தப்பி ஓடியுள்ளார். இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்ததை பார்த்த கணேசன் ஆத்திரம் தாங்காமல் காய் வெட்டும் கத்தியில் நிவேதாவை சரமாரியாக குத்தியுள்ளார்.
நிவேதாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உள்ளே வந்து பார்த்துள்ளனர். நிவேதா ரத்த வெள்ளத்தில் கிடந்ததையும், கணேசன் கத்தியோடு நிற்பதையும் பார்த்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருவதற்குள் கணேசன் தான் வைத்திருந்த கத்தியோடு காவல் நிலையம் சென்று சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications