விடிந்தும் விடியாமலும் வந்து நின்ற அமைச்சர் செந்தில் பாலாஜி! பதறியடித்து ஓடிவந்த திமுகவினர்!
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவிற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி விடிந்தும் விடியாமலும் வந்து நின்று கட்சியினரை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
அமைச்சர் தூங்குவாரா இல்லையா என விவாதித்துக் கொண்டே சற்று நிமிடத்தில் அங்கு ஆஜராகி செந்தில் பாலாஜிடம் அட்டெண்டன்ஸ் போட்டனர் கோவை கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள்.
ஒன்னு கூடிட்டாங்களே! ஓபிஎஸ்க்கு கிடைத்த க்ரீன் சிக்னல்! படபடப்பில் எடப்பாடி & கோ! கூடிய பஞ்சாயத்து!
கரூர், நாமக்கல், என 2 நாட்களாக முதலமைச்சர் நிகழ்ச்சியில் படுபிஸியாக இருந்த அமைச்சர் செந்தில்பாலாஜி, 3-வது நாளான இன்று அதுவும் அதிகாலையிலே தனது அடுத்த பிரம்மாண்டத்தை காட்ட ஆயத்தமாகிவிட்டார்.

முதலமைச்சர் வருகை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் வாரியாக சென்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி மக்களை சந்தித்து வருகிறார். சட்டசபை கூட்டத்தொடர் முடிந்தது முதல் வாரம் ஒரு முறையாவது வெளி மாவட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் கோவை மாவட்டத்திற்கு விரைவில் செல்ல திட்டமிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். இதனால் இதற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில்பாலாஜி இன்று தொடங்கிவிட்டார்.

பிரம்மாண்டம்
நேற்று முன் தினம் கரூரில் மிகப்பெரிய பிரம்மாண்டத்தை நிகழ்த்திக் காட்டி முதலமைச்சரின் பாராட்டு மழையில் நனைந்தார் செந்தில் பாலாஜி. முதலமைச்சர் பேசும் போது, செந்தில் பாலாஜியின் பிரம்மாண்டத்தை அவரே முறியடிப்பார் என்றெல்லாம் சுட்டிக்காட்டினார். முதல்வரின் அந்த வார்த்தையை உண்மையாக்கும் வகையில், கரூரில் காட்டிய பிரம்மாண்டத்தை விட கோவையில் இரு மடங்கு அதிகமாக பிரம்மாண்டத்தை நிகழ்த்திக்காட்டுவதில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

அதிகாலையில் ஆய்வு
கரூர், நாமக்கல் என இரண்டு நாட்களாக முதலமைச்சர் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தாலும் கூட, இரவோடு இரவாக கோவைக்கு திரும்பி இன்று அதிகாலை பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவுக்கு விசிட் அடித்து முதல்வர் நிகழ்ச்சிக்கான இடத்தை ஆய்வு செய்திருக்கிறார். இரண்டு மூன்று இடங்களை பார்வையிட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, அதில் ஏதேனும் ஒரு இடத்தை டிக் செய்து அங்கு விழாவுக்கான ஏற்பாடுகளை தொடங்கவிருக்கிறார்.

சுறுசுறுப்பு அமைச்சர்
இதனிடையே அமைச்சர் இடத்தை பார்வையிட வருகிறார் என்ற தகவல் கோவை கிழக்கு மாவட்ட திமுகவினருக்கு தெரியும். ஆனால் இப்படி அதிகாலையிலேயே சூரியன் உதயமாகி சில நிமிடங்களில் வந்து நிற்பார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த சுறுசுறுப்பும், வேகமும் தான் செந்தில் பாலாஜிக்கு ப்ளஸ் ஆக பார்க்கப்படுகிறது.