குடி போதையில் பெற்ற தாயே.. மகளின் தலையில் ஆட்டுக்கல்லை போட்டு.. மிரண்டுபோன மேட்டுப்பாளையம்!

Subscribe to Oneindia Tamil

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே குடிபோதையில் பெற்ற தாயே மகளின் தலையில் ஆட்டுக்கல்லை போட்டுக்கொலை செய்ததால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தவறான தொடர்பால் நிகழ்ந்த விபரீதமா என்று மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள கணுவாய்ப்பாளையம் பகுதியில் வசிப்பவர் நாகமணி (வயது 47 ). கணவர் இறந்து விட்டார். இவரது மகள் மகாலட்சுமி என்ற நதியா ( வயது 31 ). இவருக்கும் புளியந்தோப்பு சோமையனூரை சேர்ந்த சரவணகுமார் என்பவருக்கும் (இவர் கூலி வேலை செய்து வருகிறார்).

மேற்கண்ட மகாலட்சுமி என்ற நதியா (31) என்பவருக்கும், திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு பிரியதர்ஷினி(13) என்ற மகளும், நிதீஷ் குமார்(12) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சரவணகுமார் என்பவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்துவிட்டார்.

கண்டிப்பு

கண்டிப்பு

சரவணகுமார் இறந்ததிலிருந்து நதியா தனது தாய் வீடான கணுவாய்ப்பாளையம் பகுதியில் தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நதியா அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருப்பதாகவும், இதனால் அவருடைய குழந்தைகளை சரியாக கவனிப்பதில்லை என்றும்,நாகமணி தன்னுடைய பேரக்குழந்தைகளை தானே வளர்ப்பதாக மகாலட்சுமியை கண்டித்து வீட்டை விட்டு அனுப்பி விட்டார்.

அடிக்கடி பிரச்சனை

அடிக்கடி பிரச்சனை

இந்நிலையில் தனது தாயார் வீட்டிற்கு வந்தும் நதியா அதிகமாக செல்போனில் பேசுவதை விடவில்லை எனவும்,இதன் காரணமாக நதியாவிற்கும், அவருடைய தாய் நாகமணிக்கும் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது.

கோபித்துக்கொண்டார்

கோபித்துக்கொண்டார்

மேலும், நதியாவிற்கும்,தாய் நாகமணிக்கும் குடிப்பழக்கம் இருந்ததாகவும்,கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் நதியா தனது தாயை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் மகளிடம் கோபித்துக்கொண்டு தனது அக்கா வீட்டிற்கு சென்று விட்டு நேற்று தான் வீடு திரும்பியுள்ளார்.

மதுபோதை

மதுபோதை

இந்நிலையில் நேற்றிரவும் இருவரும் மதுபோதையில் இருந்ததாகவும்,நீ ஏன் அடிக்கடி செல்போன் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று தனது மகளை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் இருவரும் படுத்து உள்ளனர்.

கல்லைப்போட்டுக் கொலை

கல்லைப்போட்டுக் கொலை

இந்நிலையில் ஆத்திரம் அடங்காத நாகமணி இன்று அதிகாலை சுமார் 12.30 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்த தனது மகளை குளவிக்கல்லை (மாவு ஆட்டும் கல்) மூலம் பின்னந்தலையில் தூக்கி போட்டு கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து அறிந்த காரமடை காவல் துறையினர் மற்றும் தடயவியல் துறையில் இருந்து விரைந்து வந்து சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

நாகமணி கைது

நாகமணி கைது

மேலும்,சம்பவ இடத்தை மேட்டுப்பாளையம் டிஎஸ்பி ஜெய்சிங் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.மேலும்,தாய் நாகமணியை கைது செய்த காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதையில் பெற்ற தாயே தனது மகள் தலையில் குளவிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+