Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக All Fail - சட்டமன்றத்தில் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட பரபரப்பு ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்கள். சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்றைய நிகழ்வை அதிமுக புறக்கணித்துவிட்டது. பாஜக சார்பில் திமுக தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் அவர்கள் செயல்பாட்டை All Fail என்று ரிப்போர்ட் வெளியிடப்பட்டுள்ளது. அப்போது நயினார் நாகேந்திரன் திமுக மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார் (Nainar Nagendran).

2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கடுமையாக முயற்சி செய்கிறது. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற அதிமுக - பாஜக கூட்டணி முயற்சி செய்கிறது. நாம் தமிழர் மற்றும் தவெக கட்சிகளும் களத்தில் மல்லு கட்டுகிறார்கள். இதனால் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது.

nainar-nagendran-bjp-nainar-nagendran-released-dmk-all-fail-report-in-assembly

நயினார் வெளியிட்ட ரிப்போர்ட்

இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டமன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "வாக்குறுதிகள் நிறைவேற்றியது பற்றி திமுக நிர்வாகிகள் மாறுபட்ட கருத்துகளை கூறி வருகிறார்கள். திமுக அரசு எல்லாவற்றிலும் தோல்வியடைந்துள்ளது என்பதை All Fail என ரிப்போர்ட் தயாரித்துள்ளோம். இதை ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மக்களின் நலன் கருத்தி ஊடகங்கள் பணியாற்ற வேண்டும்.

திமுக சொல்லியது என்ன, செய்தது என்ன உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இடம்பெற்றுள்ளனர். சுமார் 90 சதவீதம் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. துணை முதலமைச்சரை, முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்பதற்காக மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கி இந்த 5 வருட ஆட்சியை ஓட்டியுள்ளனர். சட்டமன்றத்தை ஒரு விளம்பர பலகையாக மட்டுமே பயன்படுத்தியுள்ளனர்.

All Fail திமுக

தேர்தலுக்காக அரசு இயந்திரத்தையும், அரசு பணத்தையும், சட்டமன்றத்தையும் தவறாக பயன்படுத்துகின்றனர் என்கிற குற்றச்சாட்டை பகிரங்கமாக முன் வைக்கிறேன். அதற்கான விளக்கங்களை இந்த ரிப்போர்டில் வைத்துள்ளோம்" என்று கூறினார். இந்த சந்திப்பின்போது வானதி சீனிவாசன், காந்தி உள்ளிட்ட பாஜக எம்எல்ஏக்கள் அவருடன் இருந்தனர்.

நயினார் வெளியிட்டுள்ள அந்த All Fail ரிப்போர்ட்டில் விலைவாசி, பெண்கள் பாதுகாப்பு, வேலை வாய்ப்பு, சட்டம் ஒழுங்கு, பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், மத நல்லிணக்கம், சமூக நீதி ஆகியவற்றுக்கு தவறு என டிக் அடித்து, ஊழல் என்பதற்கு மட்டும் டிக் அடித்து 10க்கு 1 மதிப்பெண் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் திமுக தேர்தல் நிறைவேற்றிய மற்றும் நிறைவேற்றாத வாக்குறுதிகளை குறிப்பிட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+