கோவையில் 2 இடங்களில் புதிய மேம்பாலம்.. 1200 கோடியில் பிரம்மாண்டம்.. வருது புதிய ஆறுவழிச்சாலை
கோவை: கோவை நீலாம்பூரில் இருந்து மதுக்கரை வரை தூரத்திற்கு எல் அண்டு டி நிறுவனம் மூலம் பைபாஸ் சாலை கடந்த 1999-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த எல் அண்டு டி பைபாஸ் சாலை ரூ.1,200 கோடியில் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து வருகிறது. சர்வீஸ் சாலையுடன் சேர்த்து 6 வழிப்பாதையாக அமைக்கப்பட உள்ளது. இதற்காக சுமார் 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என இந்த சாலையின் திட்ட இயக்குநர் செந்தில்குமார் கூறியுள்ளார்.
கேரளாவில் இருந்து கோவை மாநகருக்குள் வராமல் சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லவும், பெங்களூர், சென்னை செல்லவும் பைப்பாஸ் சாலை அமைக்க வேண்டிய நிலை 30வருடங்களுக்கு முன்பே ஏற்பட்டது. எல்லா வாகங்களும் கோவை நகருக்குள் சென்று வந்த நிலையில், கடும் நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து கோவை-அவினாசி ரோட்டில் உள்ள நீலாம்பூரில் இருந்து மதுக்கரை வரை 28 கி.மீ. தூரத்திற்கு எல் அண்டு டி நிறுவனம் மூலம் பைபாஸ் சாலை கடந்த 1999-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

போக்குவரத்து நெரிசல்
ஆனால் கால மாற்றம் காரணமாக வாகன நெருக்கம் அதிகமாகிவிட்டது. எல் அண்டு டி சாலை செல்லும் பாதி பகுதிகள் கோவை மாநகரத்துடன் ஐக்கியமாகிவிட்டன. ஒரு காலத்தில் புறநகராக இருந்த பகுதிகள் இப்போது நகரமயத்தில் நெருக்கமான பகுதிகளா மாறிவிட்டன. இதனால் ஏற்பட்ட வாகன பெருக்கத்தால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
நீலாம்பூர் டூ மதுக்கரை
எனவே நீலாம்பூர் முதல் மதுக்கரை வரையுள்ள 28 கி.மீ. தூர சாலையை ரூ.1,200 கோடியில் விரிவாக்கம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக இந்த சாலையில் 2 இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் செந்தில்குமார் கூறுகையில், "கோவை-அவினாசி ரோட்டில் உள்ள நீலாம்பூர் முதல் மதுக்கரை வரை உள்ள 28 கி.மீ. தூர சாலையை ரூ.1,200 கோடியில் விரிவாக்கம் செய்ய இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து வருகிறது. சர்வீஸ் சாலையுடன் சேர்த்து 6 வழிப்பாதையாக அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக சுமார் 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும்.
புதிய மேம்பாலங்கள்
இந்த சாலையில் சிந்தாமணிபுதூர், கற்பகம் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளது. மேலும் இருகூர் உள்ளிட்ட 2 இடங்களில் உள்ள ரெயில்வே மேம்பாலம் அகலப்படுத்தப்பட இருக்கிறது. இதுதவிர 84 சிறு பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. உள்ளூர் பொதுமக்கள் சர்வீஸ் சாலையை பயன்படுத்தி கொள்ள முடியும். இதற்காக 28 கி.மீ. தூரத்திற்கும் இருபுறமும் சர்வீஸ் சாலை உள்ளோம்.
சுங்கச்சாவடிகள் மூடல்
வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் இந்த சாலையில் நீலாம்பூர் முதல் மதுக்கரை வரை உள்ள 6 சுங்கச்சாடிவகளில் 5 சுங்கச்சாவடிகள் மூடப்பட உள்ளது. இதனால் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணமின்றி வாகனங்கள் பயணிக்க முடியும். தற்போது இந்த சாலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவ உதவி மையம், போக்குவரத்து உதவி மையம் நெடுஞ்சாலை ரோந்து பணி, நெடுஞ்சாலை கிரேன் சேவை, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது" இவ்வாறு கூறினார்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications