Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி அலுமினிய பாத்திரத்தில் ISI முத்திரை கட்டாயம்! உங்க சமையலறையில் 99.5% இது முக்கியம்: கோவை பிஐஎஸ்

Subscribe to Oneindia Tamil

கோவை: சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சமையலறை பயன்பாட்டில் நீங்காத இடம்பிடித்துள்ள அலுமினியப் பாத்திரங்களுக்கு இனி இந்திய தர நிர்ணய அமைவனத்தின் அதாவது பிஐஎஸ் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக பிஐஎஸ் அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. இந்த அறிவிப்பானது இல்லத்தரசிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது..

சமையலறையில் பயன்படுத்தப்படும் அலுமினிய பாத்திரங்களுக்கு ஐ.எஸ். 1660 : 2024 (IS 1660:2024) என்ற புதிய தர நிலைகள் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளன..

New Kitchen Rule

அலுமினிய பாத்திரங்கள்

இந்திய தர நிர்ணய அமைவனம், அனைத்து வகையான சமையலறை பாத்திரங்களுக்கும் தர வரையறைகளை தற்போது செய்துள்ளது.. இந்த தர நிலைகள் சிறந்த தயாரிப்பு செயல்திறனை ஊக்குவிப்பதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை மிக முக்கியமாகக் கருதுகின்றன..

வீடு மற்றும் தொழில்முறை சமையலில் அலுமினிய பாத்திரங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால், அவற்றுக்கு ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெறுவது இப்போது சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. இதற்காக ஐ.எஸ். 1660 : 2024 (IS 1660:2024) என்ற புதிய தர நிலைகள் பராமரிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது..

ஐஎஸ்ஐ முத்திரை

வரும் அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் இந்த புதிய விதிமுறை அமலுக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பாத்திரங்களின் தரத்தை உறுதி செய்யவும், நுகர்வோர் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பி.ஐ.எஸ். விளக்கமளித்துள்ளது..

இது குறித்து கோயம்புத்தூர் கிளை முதுநிலை இயக்குநரும் தலைவருமான பவானி விரிவான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.. அவர் இதை பற்றி சொல்லும்போது, ஒரு அலுமினியப் பாத்திரத்தில் குறைந்தது 99.5 சதவீதம் தூய அலுமினியம் இருக்க வேண்டும் என்பது இனி கட்டாயமாக்கப்படுகிறது.. பாத்திரத்தின் தடிமன், அளவு, கைப்பிடிகள் தாங்கக்கூடிய எடையின் அளவு மற்றும் அதிக வெப்பத்தைத் தாங்கும் திறன் எனப் பல்வேறு நுணுக்கமான அம்சங்கள் இந்தத் தரப் பரிசோதனையில் இடம்பெற்றுள்ளன..

கோயம்புத்தூர் பிஐஎஸ்

இதன் மூலம் தரம் குறைந்த உலோகக் கலவைகள் கலக்கப்படுவது தடுக்கப்பட்டு, பொதுமக்களின் உடல்நலம் காக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..

இந்தத் தரக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வந்த பிறகு, ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத அலுமினியப் பாத்திரங்களை உற்பத்தி செய்வதோ அல்லது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதோ சட்டப்படி குற்றமாகக் கருதப்படும்..

அதேபோல், அத்தகைய பாத்திரங்களை விற்பனைக்காக விநியோகிப்பதோ, இருப்பு வைப்பதோ அல்லது வணிக ரீதியாக வாடகைக்கு விடுவதோ முற்றிலும் தடை செய்யப்பட உள்ளது.. பெரிய நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி ஆலைகள் அனைத்தும் அக்டோபர் 1-ம் தேதிக்குள் தங்களது தயாரிப்புகளை பி.ஐ.எஸ். தர நிர்ணயத்திற்கு உட்படுத்தி சான்றிதழ் பெறுவது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..

சமையலறை பாத்திரங்கள்

வீட்டு உபயோகம் மற்றும் தொழில்முறை சமையல் கூடங்களில் அலுமினியப் பாத்திரங்களின் பங்கு மிக முக்கியமானது என்பதால், இந்தத் தரக்கட்டுப்பாடு சந்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.. தரமற்ற பாத்திரங்களால் உணவில் உலோகப் படிவுகள் கலப்பதைத் தவிர்க்கவே இந்த கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன..

உற்பத்தியாளர்கள் முதல் சில்லறை விற்பனையாளர்கள் வரை அனைவரும் இந்த புதிய நடைமுறையைப் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும்.. நுகர்வோர் இனி பாத்திரங்களை வாங்கும்போது பி.ஐ.எஸ். முத்திரை இருப்பதை உறுதி செய்து வாங்குவது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு முக்கிய காரணியாக அமையும்..

இந்தத் தரக் கட்டுப்பாடு குறித்து மேலும் விளக்கங்கள் பெற விரும்பும் நிறுவனங்கள், பி.ஐ.எஸ். இணையதளம் மூலமாகவோ அல்லது அதன் கிளை அலுவலகங்களைத் தொடர்புகொண்டோ தங்களது தயாரிப்புகளுக்கான ஐ.எஸ். 1660 : 2024 சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.. தரமான தயாரிப்புகளை ஊக்குவிப்பதன் மூலம் இந்தியத் தயாரிப்புகளின் சர்வதேச மதிப்பும் உயரும் என பி.ஐ.எஸ். அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+