Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி ப்ரூக்ஸ் எல்லாம் இல்ல.. கோவைக்கு வரும் பிரமாண்ட மால்.. அதுவும் லூ லூ பக்கத்துல

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாநகரில் அடுத்தடுத்து மால்கள், ஸ்டார் ஹோட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கோவையில் தற்போதுள்ள மால்களை தூக்கி சாப்பிடுமளவுக்கு 9 ஏக்கரில், 10 லட்சம் பரப்பளவில் பிரம்மாண்ட மால் கட்டும் பணியில் ஃபீனிக்ஸ் நிறுவனம் இறங்கியுள்ளது. அதுவும் கோவை மக்கள் தற்போது அதிகவும் குவியும் லூ லூ அருகிலேயே இந்த மால் வரவுள்ளது.

தமிழ்நாட்டில் தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று பெயர் பெற்ற கோவை, நாட்டில் உள்ள இரண்டாம் நிலை நகரங்களில் வேகமாக வளரும் ஊராக உள்ளது. உற்பத்தி, குறு சிறு நிறுவனங்கள், ரியல் எஸ்டேட், ஐடி என்று பல துறைகள் நன்கு முன்னேற்றமடைந்து வருகிறது.

Coimbatore Mall

கோவையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வருவதற்கான பணிகள் நடந்து வருகிறது. விமான நிலைய விரிவாக்கம், மேம்பாலங்கள், மேற்கு புறவழிச்சாலை திட்டம், பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம், செம்மொழி பூங்கா என்று உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கோவையின் உள்கட்டமைப்பு வசதி மேம்பட்டு வருவதால் வெளி மாநில, வெளிநாட்டு நிறுவனங்கள் கோவையில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் மால்கள், 3 ஸ்டார், 5 ஸ்டார் ஹோட்டல்களும் கோவையில் அதிகளவு வரத்தொடங்கிவிட்டன. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக ஷாப்பிங் மால்கள் இருப்பது கோவையில் தான்.

ப்ரூக் ஃபீல்ட்ஸ், ஃபன் மால், புரோசோன் மால், லூ லூ ஹைப்பர் மார்க்கெட், அல்வேல் மால் ஆகியவை இயங்கி வருகின்றன. மேலும் பல புதிய மால்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய குழுமங்களில் ஒன்றாக ஃபீனிக்ஸ் நிறுவனம் கோவை தங்கள் நிறுவனம் சார்பில் ஷாப்பிங் மால் கட்டப்படும் என்று கடந்த வருடமே அறிவித்து விட்டது.

ஆனால் அதன் பிறகு அதில் பெரிய அப்டேட் இல்லாமல் இருந்தது. தற்போது அந்த மால் குறித்து பெரிய அப்டேட் கிடைத்துள்ளது. இதற்காக அவிநாசி சாலை, நவ இந்தியா பகுதி ரேடிஸன் புளூ ஹோட்டல் அருகே 9 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு மட்டுமே ரூ.300 கோடிக்கு மேல் என்கிறார்கள்.

சுமார் 10 லட்சம் பரப்பளவில் கோவையின் மிகப்பெரிய மாலாக பிரம்மாண்டமாக கட்ட திட்டமிட்டுள்ளனர். திட்டமிட்டபடி கட்டிவிட்டால் ஃபீனிக்ஸ் தான் கோவையின் பெரிய மாலாக இருக்கும். அவிநாசி சாலை, காந்திபுரம், ரேஸ்கோர்ஸ், திருச்சி சாலை என கோவையின் முக்கிய பகுதிகளை குறிவைத்து இந்த மால் வரவுள்ளது.

இதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர். இதில் ரூ.700 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. வருகிற 2025 செப்டம்பர் மாதம் கட்டுமானப் பணிகளை தொடங்கி, 2028 ஆகஸ்ட் மாதம் பணிகளை நிறைவு செய்து மால் திறப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். கோவையின் புதிய அடையாளமாக இந்த ஷாப்பிங் மால் அமையும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இதில் ஹைலைட் என்னவென்றால் லூ லூ தற்போது ஹைப்பர் மார்க்கெட்டாக தான் உள்ளது. ஆனாலும் அங்குள்ள மால்கள் மற்ற மார்க்கெட்களுக்கு சவால் அளிக்கும் வகையில் ஆஃபர்களை வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார்கள். லூ லூ அவிநாசி சாலை லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ளது. அதற்கு மிக அருகிலேயே தான் ஃபீனிக்ஸ் மால் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+