Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரியான திசையில் காவல்துறை.. கோவை வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான செயல்பாடு - ஓய்வுபெற்ற அதிகாரி பேட்டி

Subscribe to Oneindia Tamil

கோவை : கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறை சிறப்பாக செயல்பட்டதாக ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ராஜாராம் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, அதிரடி சோதனை நடத்தி வெடிபொருட்களைக் கண்டறிந்ததோடு, 6 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தியது காவல்துறை.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழக காவல்துறை மெத்தனமாகச் செயல்பட்டதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், நமது 'ஒன் இந்தியா தமிழ்' செய்தி தளத்திற்கு பேட்டி அளித்துள்ள ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ராஜாராம், காவல்துறையின் விசாரணை சரியான திசையில் பயணிப்பதாக பாராட்டியுள்ளார்.

கோவை சம்பவம்

கோவை சம்பவம்

கோவை உக்கடம் அருகே கடந்த அக்டோபர் 23ஆம் தேதி அதிகாலை காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கார் சிலிண்டர் வெடிப்பில் பலியான ஜமேசா முபின் பற்றி போலீசாரின் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. ஜமேசா முபின் கூட்டாளிகள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வெடி பொருட்கள், சதி என விவகாரம் பெரிதாக இருப்பதால் விசாரணை என்.ஐ.ஏவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

சந்தேகம் ஏற்படுத்திய பொருட்கள்

சந்தேகம் ஏற்படுத்திய பொருட்கள்

உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே ஒரு கார், 2 எல்பிஜி சிலிண்டர்கள் மற்றும் சில பொருட்களோடு வெடித்தது. அதில் வாகனத்தை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அங்கு காரில் இருந்து சிலிண்டர் உள்ளிட்ட பொருட்கள், அருகே கிடந்த ஆணிகள், பால்ரஸ் ஆகியவற்றால் சந்தேகமடைந்த போலீசார், உயிரிழந்த ஜமேசா முபீன் வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு 75 கிலோ அளவில் வெடிபொருட்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் கண்டறியப்பட்டன.

 இரவில் பிளான்

இரவில் பிளான்

தொடர்ந்து, ஜமேசா முபீன் வீட்டின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் முபின் உள்ளிட்ட 5 பேர், முந்தைய நாள் இரவு 11.25 மணியளவில் சிலிண்டர்களை தூக்கிச் செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து, விசாரணை வேட்டையை தீவிரப்படுத்திய போலீசார், உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது அசாருதீன், முகமது தல்கா மற்றும் ஜி.எம் நகர் பகுதியைச் சேர்ந்த ஃபிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் முகமது ரியாஸ் ஆகியோரை கைது செய்தனர்.

 சோதனை

சோதனை

5 பேர் மீதும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (ஊபா) அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 27ஆம் தேதியன்று ஜமேஷா முபினின் உறவினர் அப்சர்கான் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய வீட்டில் இருந்து லேப்டாப் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 6 பேரின் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

பல பகீர் தகவல்கள்

பல பகீர் தகவல்கள்

போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன. வெடித்த கார் 9 பேரின் கைகள் மாறி பத்தாவது ஆளாக இவர்களுக்கு கிடைத்ததையும், காரின் உரிமையாளரையும் போலீசார் கண்டுபிடித்தனர். மேலும், உயிரிழந்த ஜமேசா முபின் 2019ஆம் ஆண்டு என்.ஐ.ஏ விசாரணை வளையத்தில் இருந்தவர் என்ற தகவலும் போலீசாரால் வெளியிடப்பட்டது.

பாதுகாப்பு தீவிரம்

பாதுகாப்பு தீவிரம்

தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு குறித்தும், கோவை வெடி விபத்தில் அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. உளவுத்துறை, காவல்துறையை பலப்படுத்துவது பற்றி முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன. கோவை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், கூடுதலாக காவல் நிலையங்கள் அமைப்பது உள்ளிட்ட சில முக்கிய முடிவுகளும் தமிழக அரசால் எடுக்கப்பட்டிருக்கின்றன.

தொடர்புடையவர்களிடம் விசாரணை

தொடர்புடையவர்களிடம் விசாரணை

கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, கோவை முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான தல்கா, அல்உம்மா அமைப்பைச் சேர்ந்த பாட்ஷா என்பவரது உறவினர் என தெரியவந்துள்ளது. மேலும், கைதானவர்களோடு தொடர்புடையவர்களையும் போலீசார் விசாரித்து வந்தனர்.

என்.ஐ.ஏ விசாரணை

என்.ஐ.ஏ விசாரணை

மேலும், இந்த வழக்கு வெடிகுண்டுகள், வெளிநாட்டு சதி தொடர்புடையது என்பதால் என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பரிந்துரைத்தது. அதன்படி, மத்திய அரசு, கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க ஆணை பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில், என்.ஐ.ஏ போலீசார் நேற்று எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

இதற்கிடையே, கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தமிழக காவல்துறை மெத்தனமாகச் செயல்பட்டது என்றும், சம்பவத்தை முன்கூட்டியே கணிக்க உளவுத்துறை தவறிவிட்டது என்றும் பாஜக உள்ளிட்ட கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழக அரசு விரைந்து விசாரணைகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டப்பட்டது.

ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி

ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி

இந்நிலையில், ஓய்வுபெற்ற டிஎஸ்பி ராஜாராம், கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டதாகத் தெரிவித்துள்ளார். நமது 'ஒன் இந்தியா தமிழ்' தளத்திற்குப் பேட்டி அளித்த அவர், கார் வெடிப்பு சம்பவம் நடந்தது முதல், உடனே அப்பகுதியில் கிடைத்த பொருட்களின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தி, ஜமேசா முபின் வீட்டில் சோதனையிட்டு வெடி பொருட்களைக் கைப்பற்றியது காவல்துறை எனத் தெரிவித்துள்ளார்.

 சரியான திசையில்

சரியான திசையில்

மேலும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், முபின் கூட்டாளிகளைக் கைது செய்து விசாரணைக்குள் கொண்டு வந்தது, தொடர்ந்து அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு வருகின்றனர், குற்றவாளிகளின் பின்னணிகள் பற்றி போலீசார் ஆய்வு செய்து சதிச் செயலை விரைவாகவே வெளிக்கொண்டு வந்துள்ளனர், ஒட்டுமொத்தமாக காவல்துறை இந்த விவகாரத்தில் சரியான திசையில் சிறப்பாகப் பயணித்துகொண்டிருக்கிறது என ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ராஜாராம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+