பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு சலூன் கடைக்காரர் வெட்டிக்கொலை - இந்து முன்னணி பிரமுகர் கைது
சலூன் கடைக்காரர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக செல்வபுரத்தை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை: கோவையில் சலூன் கடை உரிமையாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் இந்து முன்னணி பிரமுகர் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடனுக்கு வாங்கிய பணத்தை திருப்பி கேட்டதால் கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வெட்டிக்கொல்லப்பட்ட நபரின் பெயர் சசிகுமார் என்பதாகும். இவர் கோவை செல்வபுரம் தெலுங்குபாளையம் புதூர் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகனாவார்.
செல்வபுரம் தெலுங்குபாளையத்தில் சசிகுமார் சலூன் கடை வைத்து நடத்தி வந்தார். பைனான்ஸ் தொழிலும் பார்த்து வந்துள்ளார். பலருக்கும் கடனுக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.

நள்ளிரவில் படுகொலை
நள்ளிரவு சுமார் 1 மணியளவில் சசிக்குமாரின் வீட்டிற்கு வந்த இரண்டு நபர்கள் அவரை வெளியே வரசொல்லி அழைத்துள்ளனர். அப்போது வெளியே வந்த சசிக்குமாரை, இருவரும் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் அலறியபடி சாய்ந்தார் சசிகுமார். அப்போது அங்கிருந்து இருவரும் தப்பி ஓடினர்.

ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு
சசிக்குமாரின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த அவரது அவரது உறவினர்கள், அவர் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து வந்த செல்வபுரம் காவல்துறையினர் சசிகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருவர் கைது
கொலை தொடர்பாக செல்வபுரத்தை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் ராம்ஜி மற்றும் இளங்கோவன் ஆகிய இருவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் சசிக்குமாரின் சலூன் கடையில் அவர்கள் இருவரும் வாடிக்கையாக வந்து செல்வதுமாக இருந்துள்ளனர். இந்த நிலையிலே சசிகுமாரிடம் ராம்ஜி ரூ.5லட்சம் வட்டிக்கு பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு
சசிகுமார் பணத்தை திருப்பி கேட்டதால் ராம்ஜி தகராறு செய்ததாக தெரிகிறது. பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாக சசிகுமாரை தனது நண்பருடன் சென்று நள்ளிரவில் வெட்டிக்கொன்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications