விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத ஸ்டாலின்.. இனி முதல்வராக வரவே கூடாது.. கொந்தளித்த எச் ராஜா
கோவை: ‛‛விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதவர் அடுத்து முதல்வராக வரக்கூடாது. வர விடமாட்டோம் என்று உறுதி மொழி எடுத்து கொண்டு பேரியக்கமாக உருவாக வேண்டும்'' என பாஜகவின் மூத்த தலைவர் எச் ராஜா கூறினார்.
கோவை இந்து முன்னணி சார்பில் பூ மார்க்கெட் பகுதியில் உள்ள தெப்பக்குளம் மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்தை பாஜக செயற்குழு உறுப்பினர் எச். ராஜா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச் ராஜா, பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமன் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியி்ல எச் ராஜா பேசியதாவது:

சீனாவின் தரமற்ற உற்பத்தி
கடந்த இரண்டு வருடங்களாக சீன வைரஸால் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட இயலாமல் போனது. சீன பொம்மைகள் சீன பட்டாசுகள் முதல் அவர்கள் உற்பத்தி செய்து அனுப்பிய கம்யூனிஸ்ட் வரை அனைத்தும் தரமற்றவை தான். கம்யூனிசம் என்று சொன்னாலே மக்களை கஷ்டத்தில் தள்ளுவது என்பது போல் ஆளாகிவிடும். மோடி பிரதமராக இல்லை என்றால் கோவிட் காலத்தில் 50 கோடி பேர் இறந்திருப்பார்கள்.

வாழ்த்து சொல்லாத முதல்வர்
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத நபர் அடுத்த முதல்வராக வரக்கூடாது. வர விடமாட்டோம் என்று உறுதி மொழி எடுத்து கொள்வோம். இன்று விநாயகர் சதுர்த்திக்கு கூடினோம் கலைந்தோம் என்று இல்லாமல் வீடுவீடாக சென்று விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத நபர் இன்னொரு முறை வந்து விடக்கூடாது என கூறவேண்டும், இது பேரியக்கமாக உருவாக வேண்டும்.

தேசவிரோத நடவடிக்கைகள்
தேச விரோத நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. சமூக வலைதளங்கள் வந்த பின் உளறுவது அதிமாகிவிட்டது. பலரும் பலவற்றை உளறி வருகிறார்கள். அன்றைய காலங்களில் கிராமிய பாட்டுகள் மூலம் வெள்ளையனை வெறியேற செய்ய பல பாடல்கள் போடப்பட்டது. இங்கு இந்து விரோதிகள், தேச விரோதிகள் அதிகமாக சுற்றி வருகிறார்கள். அரசாங்கம் மூளை கெட்டு திரியக்கூடாது. தென்னாடுடைய சிவனே போற்றி என்றால் பாரத நாடு முழுமைக்கும் தலைவர் சிவன் என்று அர்த்தம்.

வெடிமருந்து குன்றில் தமிழ் மக்கள்
இந்த அரசாங்கம் கிறித்துவ பாதிரியார் ஜகத் கஸ்பரை கைது செய்ய வேண்டும். NGOக்கள் அனைத்தும் கலெ க்சனுக்காக தான் செயல்படுகிறது. வெடிமருந்து குன்றின் மீது தமிழ்மக்கள் அமர்ந்துள்ளனர். ஏனென்றால் இங்கு திராவிட மாடல் உள்ளது. அரசியல்வாதிகள் மதத்தினுள் வராமல் இருந்தால் ஆதினங்கள் அரசியல் பேச மாட்டார்கள். மதமாற்றம் என்பது தேசிய அபாயம் என்பதை நாம் மறந்துவிட கூடாது. இந்து மதத்தில் தீண்டாமை என்பதே கிடையாது. வேற்றுமை என்பது செய்தொழிலில் உள்ளது என்று கண்ணன்(தெய்வம்) கூறியுள்ளார். இந்துவில் பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லை'' என்றார். இந்த விநாயகர் ஊர்வலமானது காந்தி பார்க் வழியாக சென்று முத்தண்ணன் குளத்தில் நிறைவடைந்து கரைக்கப்பட்டது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications