கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மத விழாவிற்கு ஓகே.. பகத் சிங் பிறந்த நாளுக்கு மட்டும் நோ.. சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவி பரபரப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    மத விழாவிற்கு ஓகே.. பகத் சிங் பிறந்த நாளுக்கு மட்டும் நோ.. மாணவி பரபரப்பு!- வீடியோ

    கோவை: பகத்சிங் பிறந்த நாளை கொண்டாடியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவி மாலதி பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

    கோவை அரசு கல்லூரியில் பகத்சிங் பிறந்த நாளை கொண்டாடிய எம்.ஏ முதலாமாண்டு மாணவி மாலதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Student Malathi who gets a suspension for celebrating Bhagat Singh birthday gives PM

    கடந்த செப்டம்பர் 28-ம் தேதி கல்லூரியில் பகத்சிங் பிறந்த நாளை கொண்டாடியதாக இவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அனுமதி இல்லாமல் மாணவர்களை திரட்டியதாக இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் மாணவி மாலதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், பகத் சிங் பிறந்த நாள் அன்று அவரை நினைவு கூற விழாவை கொண்டாடினோம். இதற்காக கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டோம். ஆனால் எங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.

    இதனால் நாங்கள் அமைதியாக தனியாக கொண்டாடினோம். கொஞ்சம் மாணவர்கள்தான் வந்து இருந்தனர்.

    மிகவும் அமைதியாக கொண்டாடினோம். பகத் சிங் குறித்து பேசினோம். அவரின் சுதந்திர போராட்டம் குறித்து பேசினோம். ஆனால் இதற்காக என்னை சஸ்பெண்ட் செய்து இருக்கிறார்கள். பகத் சிங் குறித்து விழா நடத்த கூடாதா? ஒரு சுதந்திர வீரர் குறித்து பேச கூடாதா?

    என்னை கைது செய்தது மாணவர்களுக்கு ஒரு மிரட்டல். என்னை சஸ்பெண்ட் செய்து எல்லோருக்கும் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். மாணவர்கள் பேசவே கூடாது என்று நினைக்கிறார்கள்.

    Student Malathi who gets a suspension for celebrating Bhagat Singh birthday gives PM

    இந்த நிகழ்ச்சி 45 நிமிடம் தான் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்குத்தான் என்னை சஸ்பெண்ட் செய்துள்ளனர். இதனால் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எதுவுமே நடக்கவில்லை.

    மாணவர்களுக்கு அறிவு வந்துவிட கூடாது என்று நினைக்கிறார்கள். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என்று மதம் சார்ந்த பண்டிகையை எல்லாம் கொண்டாடுகிறார்கள். ஆனால் தலைவரின் பிறந்தநாளை கொண்டாடுவதில்லை.

    [நேதாஜி இன்னும் உயிரோடு இருக்கிறாரா? விளக்கம் அளிக்க மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு]

    நான் ராக்கிங் செய்தால் சஸ்பெண்ட் செய்யலாம். தலைவரின் பிறந்தநாளை கொண்டாடியது குற்றமா?. இதற்காக இப்போது என்னை விசாரிக்க அழைத்து இருக்கிறார்கள். இதற்கு எதிராக சட்ட ரீதியாக போராடுவோம். நான் கல்லூரியில் உட்காரும் வரை கண்டிப்பாக போராடுவோம், என்றுள்ளார்.

    English summary
    Student Malathi who gets a suspension for celebrating Bhagat Singh birthday gives Press Meet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X