கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடுரோட்டில்.. பச்சை சட்டையுடன் "மிரட்டிய" நடிகர் வடிவேலு.. குபீர்னு சிரித்த மக்கள்.. சபாஷ் கணியூர்

வடிவேலு படத்துடன் நோட்டீஸ் போர்டு ஒன்று கோவை அருகே வைக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சியில் உள்ள இந்திரா நகர், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சோஷியல் மீடியா முழுக்க இந்திரா நகர் பற்றின பேச்சாகவே உள்ளது.. என்ன காரணம்?

தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சிகளில் "என் குப்பை - என் பொறுப்பு" என்ற திட்டத்தின்கீழ் பொதுமக்களின் பங்களிப்புடன் கூடிய நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது..

தமிழக முதல்வர் முக ஸ்டாலினால் அண்மையில் துவக்கி வைக்கப்பட்ட இந்த திட்டம் அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

இங்கயும் வந்துட்டாருயா... குழந்தைகளையும் விட்டுவைக்காத வடிவேலு... இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்...! இங்கயும் வந்துட்டாருயா... குழந்தைகளையும் விட்டுவைக்காத வடிவேலு... இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்...!

 தெருவில் குப்பைகள்

தெருவில் குப்பைகள்

இதையடுத்து, அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஊராட்சி நிர்வாகம், ஆங்காங்கே குப்பை தொட்டிகளை அமைத்து குப்பைகளை சேகரிக்கும்படி பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.. இதற்காக சில விழிப்புணர்வுகளையும் மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது. இப்படித்தான் ஒருமுறை கம்பம் நகராட்சியில், குப்பைகள் கொட்டும் இடத்தை தவிர, பொது இடங்களிலும் குப்பைகளை மக்கள் கொட்டியதை கண்டு, புதுவிதமான விழிப்புணர்வை மேற்கொண்டது. தெருக்களில் பொதுமக்கள் குப்பை கொட்டும் இடத்தை தேர்வு செய்து, அங்கு பணியாளர்கள் கோலம் வரைந்து விட்டனர்..

 கோலம்

கோலம்

குப்பை கொட்ட வருகிற பெண்கள், இந்த கோலத்தை பார்த்து விட்டு அதன் மீது குப்பைகளை கொட்டாமல் திரும்பி சென்றனர்.. நகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட இந்த நூதன விழிப்புணர்வு, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.. அதுபோலவே, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில், நகர் மன்ற தலைவர் பாத்திமா பஷீரா, குப்பை கொட்டும் இடங்களில் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு பதாகைகளை வைத்து வருகிறார்.. அதுமட்டுமல்லாமல், கூத்தாநல்லூர் நகராட்சி சார்பில் விழிப்புணர்வு விளம்பர போர்டு ஒன்று வைத்தார்..

 நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு

அதில், வின்னர் பட வடிவேல் போட்டோவை பெரிதாக அச்சிட்டு வைத்தார். "இந்த பார்டரை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன், பேச்சு பேச்சாக தான் இருக்கணும்" என்ற அவரின் பிரபலமான காமெடி காட்சிகளை நினைவுபடுத்தும் வகையில், "இந்த இடத்தில் குப்பையை கொட்ட நீயும் வரக் கூடாது, நானும் வரமாட்டேன்" என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டன.. இந்த வடிவேலு பேனர் சோஷியல் மீடியாவில் டிரெண்ட் ஆகி நகர்மன்ற தலைவர் பாத்திமாபஷீராவுக்கு பாராட்டுக்களை குவித்தது.

வின்னர்

வின்னர்

இப்போது இதே பாணியை கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சியிலும் கையில் எடுத்துள்ளனர்.. இங்குள்ள இந்திரா நகர் பகுதியில், நடுரோட்டிலும், சாலையோரங்களிலும் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வந்தனர்... இதனால், நாய்கள் தொல்லையும் அதிகரித்து காணப்பட்டது... சாலையில் செல்வோர் மீது குப்பையில் உள்ள பிளாஸ்டிக் பேப்பர் பறந்து விழுந்து சிறு, சிறு விபத்துகளும் ஏற்பட்டு வந்தன..

Recommended Video

    Vadivelu மைசூர் போகும் வழியில் Bannari Amman கோவிலுக்கு Visit
    வடிவேலு

    வடிவேலு

    எனவே, குப்பை கொட்டுவதை தவிர்க்க முடிவு செய்த கணியூர் ஊராட்சி நிர்வாகம், வடிவேலுவின் வின்னர் பட போட்டோவை வைத்துவிட்டது. அந்த அறிவிப்பு பலகையில், "இந்த இடத்துக்கு நீயும் குப்பை கொட்ட வரக்கூடாது! நானும் வரமாட்டேன்" என்ற டயலாக்கையும் எழுதி வைத்துள்ளது. இது அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது... இப்போது, வடிவேலு பேனரை பார்த்ததுமே, பொதுமக்கள் அங்கு குப்பை கொட்டுவதை தவிர்க்கிறார்களாம்.. சுகாதாரப் பணியாளர்களும், வீடு வீடாக சென்று குப்பையை சேகரித்து செல்கின்றனராம்.. சபாஷ்!

    English summary
    Super and innovative notice board: actor vadivelus kaipulla notice board in kovai kanniyur panchayat
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X