Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயணிகள் 10 ரூபாய் நாணயம் வழங்கினால் கப்சிப்ன்னு டிக்கெட் கொடுக்கணும்! நடத்துநர் வாதம் பண்ணக்கூடாது!

Subscribe to Oneindia Tamil

கோவை: பேருந்துகளில் பயணிகள் 10 ரூபாய் நாணயங்களை வழங்கினால் மறுப்பு தெரிவிக்காமல் அதை பெற்றுக்கொண்டு டிக்கெட் வழங்க வேண்டும் என நடத்துநர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

பேருந்துகள், மளிகைக்கடைகள் என பெரும்பாலான இடங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதால் பொதுமக்கள் மிகுந்த தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

10 ரூபாய் நாணயங்கள் செல்லத்தக்கவை, அரசால் அங்கீகரிக்கப்பட்டவை என எத்தனையோ முறை இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டும் அறியாமையால் பல இடங்களில் இந்த அவலம் நீடிக்கிறது.

10 ரூபாய் நாணயம்

10 ரூபாய் நாணயம்

கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் ரிசர்வ் வங்கியால் 10 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் 10 ரூபாய் நாணயத்தின் புழக்கம் குறைவாகவே இருந்து வருகிறது. காரணம் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தி மக்கள் மத்தியில் பரவியதே ஆகும். இதன் காரணமாக தான் பேருந்துகள், மளிகைக் கடைகள், என பெரும்பாலான இடங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர்.

அரசுப் பேருந்துகள்

அரசுப் பேருந்துகள்

இதில் கொடுமை என்னவென்றால் தனியார் பேருந்துகள், நிறுவனங்களில் தான் 10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுக்கிறார்கள் என்றால் அரசு அலுவலகங்கள், அரசுப் பேருந்துகள், என அரசு நிறுவனங்களிலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க முன்வருவதில்லை. இதற்கு காரணம் 10 ரூபாய் நாணயத்தை பற்றிய அறியாமை தான். 10 ரூபாய் நாணயம் செல்லும் என எத்தனையோ முறை அறிவிப்புகள் வெளியிட்டும் அது இன்னும் பரவலாக மக்கள் மத்தியில் சென்று சேர்வதில்லை.

போக்குவரத்துக் கழகம்

போக்குவரத்துக் கழகம்

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை காட்டிலும் கோவை மாவட்டத்தில் இந்தப் பிரச்சனை சற்று அதிகமாகவே உள்ளது. பல இடங்களில் பஸ் கண்டக்டர்கள் பயணிகள் இடையே வாக்குவாதம் சண்டை சச்சரவுகள் கூட ஏற்பட்டுள்ளன. இதனால் தான் இப்போது இந்த விவகாரம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குநர் வரை கவனத்திற்கு சென்று புதிய அறிவுறுத்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதில், கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு;

மறுப்பு தெரிவிக்கக் கூடாது

மறுப்பு தெரிவிக்கக் கூடாது

''கோவைக் கோட்டம் கோவை மண்டலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்தில் நடத்துநர்களாக பணிபுரிகின்றவர்கள் பேருந்தில் பயணிகளிடம் பயணக் கட்டணமாக ரூ.10/- நாணயத்தினைப் பெற்று பயணச் சீட்டு வழங்குவதில்லை என்ற புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. எனவே பேருந்தில் பணிபுரிகின்ற நடத்துனர்கள் பயணிகளிடம் ரூ.10/- நாணயத்தினை மறுப்பின்றி பெற்று பயணச் சீட்டு வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ''

நடவடிக்கை பாயும்

நடவடிக்கை பாயும்

''அவ்வாறு பயணிகளிடம் ரூ.10/-க்கான நாணயங்களை பெறாமல் வாக்குவாதம் செய்யும் நடததுனர்கள் மேல் புகார் பெறும் பட்சத்தில் சட்ட பிரிவு மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் ரூ.10/- நாணயத்தினை பெற்று பயணச் சீட்டு வழங்க வேண்டும் என்று அனைத்து கிளை மேலாளர்களும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.''

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+