’ஸ்விக்கி’ ஊழியருக்கு பளார்! வீடியோவால் வசமாய் சிக்கிய காவலர் சதீஷ் சஸ்பெண்ட்! அதிரடியாக கைது!

Subscribe to Oneindia Tamil

கோவை : கோவையில் பெண்ணை இடித்து விட்டு சென்ற பள்ளி வேனை நிறுத்தி தட்டிக்கேட்ட ஸ்விக்கி ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் சதீஷ் தாக்கிய வீடியோ நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யபட்டதோடு, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்த உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இளைஞர் ஒருவர் நின்றபோது, அவ்வழியாக சென்ற தனியார் பள்ளி வாகனம் சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்னை இடித்துவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த வேனை துரத்திச் சென்ற இளைஞர் தடுத்து நிறுத்திக் கேட்டபோது, அங்கு வந்த போக்குவரத்து காவலர் இதனை கேட்க நீ யார் எனக் கேட்டு கடுமையாக தாக்கியதாகவும் இதற்கு ஒரு நீதி வேண்டுமென கேட்டுகொண்டுள்ளார்.

இளைஞர் மீது தாக்குதல்

இளைஞர் மீது தாக்குதல்

இதுகுறித்து பேசிய அந்த இளைஞர்," அவிநாசி சாலை ஃபன் மால் சிக்னல் பகுதியில் தனியார் பள்ளி வாகனம் ஒரு பெண்ணை இடித்து விட்டு நிற்காமல் சென்றதாகவும் அந்த வாகனத்தை தான் வழிமறைத்து நிறுத்தி ஓட்டுனரிடம் பெண்ணை இடித்தது குறித்து கேட்டு கொண்டிருக்கும் போது அங்கிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர், "இதனை விசாரிக்க நாங்கள் இருக்கிறோம் நீ யார்" என கேட்டு தன்னை தாக்கியதாக தெரிவித்தார். மேலும் எனது செல்போனையும் பிடிங்கிக் கோண்டார்" என கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கமிஷனரிடம் புகார்

கமிஷனரிடம் புகார்


இந்நிலையில் தாக்குதலுக்குள்ளானவர் மோகனசுந்தரம் என்பதும், பட்டதாரி இளைஞரான இவர் குடும்ப சூழல் காரணமாக டெலிவரி பாய் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் தாக்குதல் சம்பவம் குறித்து மோகனசுந்தரம் கோவை காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், " நான் ஸ்விகியில் டெலிவரி பாயாக பணியாற்றி வருகிறேன். வெள்ளிக்கிழமை மாலை டெலிவரி பணியில் இருந்தேன்.

பணியிட மாற்றம்

பணியிட மாற்றம்

அப்போது ஃபன்மால் அருகே நேஷனல் மாடல் பள்ளி வாகனம், ஒரு பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. நான் அந்த வண்டியை நிப்பாட்ட முயன்று நியாயம் கேட்டேன். உடனே அங்கிருந்த போக்குவரத்து காவலர் சதீஷ் என்னை அடித்து,என் செல்போன், ஹெட்போன், கீ செயின் உள்ளிட்டவற்றை பிடிங்கி சென்றுவிட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று கூறியிருந்தார். இந்நிலையில் மோகன சுந்தரத்தை தாக்கிய காவலர் சதீஷ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்ர்.

கடும் கண்டனம்

கடும் கண்டனம்

இந்நிலையில் எந்தவித தவறும் செய்யாமல் அதே நேரத்தில் நடந்த தவறை தட்டிக் கேட்ட இளைஞரை பொது இடத்தில் வைத்து தாக்குவதற்கு காவலருக்கு உரிமையை யார் கொடுத்தது எனவும், காவல் துறையில் பணியாற்றினால் யாரை வேண்டுமானாலும் அடிக்கலாமா? என சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதம் கிளம்பியுள்ளது. அதே நேரத்தில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தாக்குதல் நடத்திய காவலரை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்வது தான் உச்சபட்ச தண்டனையா என கேள்வி எழுப்பியுள்ள சமூக வலைதளவாசிகள் , மோகனசுந்தரத்தை தாக்கிய சதீஷை பணியிடை நீக்கம் செய்வதோடு, அவரை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

காவலர் கைது

காவலர் கைது

இந்நிலையில் காவலர் சதீஷ் பணியிடை நீக்கம் செய்யபட்டதோடு, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கோவை போலீஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"போக்குவரத்து காவலர் 2846 சதீஸ் மோகனசுந்தரத்திடம் சென்று இதனை விசாரிக்க நாங்கள் இருக்கிறோம் நீ யார் என்று கேட்டு அவரை கைகளால் தாக்கியதாக வாட்ஸ்அப் குழுவில் வீடியோ வந்துள்ளது. இது தொடர்பாக மோகனசுந்தரம் இன்று 04.06.2022ம் தேதி கொடுத்த புகாரின் பேரில் E2 பிளமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி போக்குவரத்து காவலர் திரு சதீஸ் கைது செய்யப்பட்டு தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்." என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+