கரூர் கம்பெனியின் ரூ 15 லட்சம் ஆஃபர்! பொய் ஜோசியம் சொல்ல சொன்ன திமுக! எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் பகீர்

Subscribe to Oneindia Tamil

கோவை: "2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகதான் ஜெயிக்க போகிறது" என யூடியூப்பில் சொன்னால் ரூ 15 லட்சம் தருவதாக கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசியது என கவுண்டம்பாளையம் தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் தன்னிடம் பேசியதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தவெக ஆட்சியின் 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தலைமை தாங்கினார்.

tvk goundampalayam

இந்த நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி சந்தோஷ், "தமிழில் வணக்கம் என்று கூறினால் ட்ரோல் செய்து விடுவார்கள். எனவே ட்ரோலில் உள்ளதையே கூறிவிடுகிறேன்" என்று "அனைவருக்கும் மன்மத வணக்கம்" என்று கூறினார்.

அவர் மேலும் பேசியதாவது: "சட்டசபை துவங்கியதில் இருந்து சிறு குழந்தை முதல் 90 வயது தாத்தா வரை கவுண்டம்பாளையம் கனிமொழி சந்தோஷ் என்றால் யார் என்று தெரிகிறது. கனிமொழியால் கவுண்டம்பாளையத்திற்கு பெருமையா அல்லது கவுண்டம்பாளையத்தால் கனிமொழிக்கு பெருமையா என்று எனக்கு தெரியாது.

100 நாளில் இந்த மேனா மினுக்கி என்ன செய்து கிழித்து விட்டார் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் கமெண்ட் பதிவு செய்யப்படுகிறது. 100 நாளில் ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு வேலையை துவக்கினால் வீடு செல்வதற்கு இரவு 11 மணி ஆகிவிடுகிறது.

அந்த அளவிற்கு மக்களின் கோரிக்கைகளை கேட்டு பணியை ஆற்றி வருகிறேன். சித்தி சீரியல், அண்ணாமலை சீரியல், பிக் பாஸ் எல்லாம் தாண்டி சட்டசபை தற்போது நன்கு ரீச் ஆகியிருக்கிறது.

tvk goundampalayam

சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஜோதிடம் பற்றி பேசும்பொழுது எனக்கு மிகவும் கோபம் வந்தது. ஆனால் அதை சட்டசபையில் காட்டிக் கொள்ள முடியாது. அன்றே ஒரு உண்மையை கூற வேண்டும் என்று நினைத்தேன்.

தற்பொழுது அந்த உண்மையை கூறுகிறேன் "நான் தவெக கட்சியில் சேர்வதற்கு முன்பு இதே ஜோதிடரிடம் கரூர் கம்பெனியை சேர்ந்தவர்களிடமிருந்து ஒரு செல்போன் அழைப்பு வந்தது.

அந்த அழைப்பில், வருகின்ற சட்டசபைத் தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் என்று ஜோதிட ரீதியாக கூறி எனது Youtube பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு 15 லட்சம் ரூபாய் பேக்கேஜ் பேசினார்கள்" என்று தெரிவித்தார்.

அப்பொழுது கூட திமுக ஜெயிக்காது என்று கணித்ததாகவும், இருந்தாலும் திமுக தான் ஜெயிக்க வேண்டும் என்று வீடியோ பதிவில் கூற வேண்டும் என்று என்னிடம் பேக்கேஜ் பேசியதாக தெரிவித்தார்.

tvk goundampalayam

என்னிடம் அவர்கள் பேசிய ரெக்கார்டு எல்லாம் இருக்கிறது. தேர்தலில் ஜெயிப்போமா மாட்டோமா? என்று கேட்ட கேள்விகளின் ஆதாரமும் என்னிடம் இருக்கிறது.

சட்டசபையில் சேர்களை தூக்கி வீசுவது போன்ற சம்பவங்கள் எல்லாம் கூட நடக்கும். அப்படி இருந்தாலும் தமிழக வெற்றி கழகத்தினர் எதுவும் செய்யக் கூடாது என்று எங்களை தவெக மூத்த நிர்வாகிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இன்று கூட பல்வேறு செய்திகளில், என்னிடம் 26 கார்கள் உள்ளது என்றெல்லாம் செய்திகள் வெளியாகிறது. மக்கள் வரிப்பணத்தை தூக்கி சாப்பிடுகிறார்கள் என்றெல்லாம் கூறுகிறார்கள்.

இதையெல்லாம் நீங்கள் வந்து பார்த்தீர்களா? எந்த ஆதாரத்தை வைத்து அவ்வாறு பேசுகிறார்கள்? சட்டமன்ற உறுப்பினர் என்றால் செருப்பு போடக்கூடாது, தலையை சீவக் கூடாது, குளிக்க கூடாது அப்படியே வரவேண்டும் என்று ஏதாவது உள்ளதா என்று கடிந்து கொண்டார்.

சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்பவர்கள் தைரியம் இருந்தால் நேரில் வந்து பேசுங்கள் பார்க்கலாம் என்று சவால் விட்டார்.

என்னை அழகான பொம்மை எனக் கூறுகிறார்கள். இந்த அழகான பொம்மை ஆபத்தான பொம்மையும் கூட என்றும், தூரமாக நின்று முகம் தெரியாமல் பேசிக் கொள்ளுங்கள். என் முகத்திற்கு முன்பு வந்தால் இந்த அழகான பொம்மை என்ன செய்யும் என்பது பிறகு தெரியும் என்று கூறினார்.

2031 தேர்தலில் இரண்டு கட்சி எல்லாம் இருக்காது. நம்முடைய ஒரே கட்சி தான் இருக்கும். இரண்டு கட்சிகளுக்கு இடையில் போட்டி என்றெல்லாம் இருக்கவே இருக்காது, என்றென்றும் தமிழக கட்சி கழகம் தான் என்று தெரிவித்தார்.

tvk goundampalayam

உள்ளாட்சித் தேர்தலில் ஒரு இடம் பாக்கி விடாமல் ஜெயிக்க வேண்டும். திமுக மற்றும் அதிமுக ஐடி விங்கிற்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். கவுண்டம்பாளையத்திற்கு Free visibility தான் செய்கிறார்கள்.

சட்டசபையில் ஒவ்வொருவரும் 10 கேள்விகளை கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பாவம் நம்முடைய சபாநாயகர் அவர்களிடம் மாட்டிக் கொண்டார் என்று தெரிவித்தார்.

நிச்சயமாக கவுண்டம்பாளையம் தொகுதியில் பட்டா பிரச்சனை தீர்ந்துவிடும் என்றும் நம்முடைய ஆட்சியில் அமைச்சரிடம் கோரிக்கை மனுக்களுடன் சென்றாலே அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விடுகிறது என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+