Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்ச்சைக்குள்ளாகும் காரப்பன் சில்க்ஸ்.. காரப்பன் மீது 2 பிரிவுகளில் பாஜக புகார்... விரைவில் கைது?!

காரப்பன் சில்க்ஸ் நிறுவனர் காரப்பன் மீது கோவை கமிஷனர் அலுவலகத்தில் பாஜக இரண்டு பிரிவுகளின் கீழ் புகார் அளித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: காரப்பன் சில்க்ஸ் நிறுவனர் காரப்பன் மீது கோவை கமிஷனர் அலுவலகத்தில் பாஜக இரண்டு பிரிவுகளின் கீழ் புகார் அளித்துள்ளது.

வலைத்தளங்களில் தற்போது காரப்பன் சில்க்ஸ் நிறுவனம் திடீர் என்று வைரலாகி உள்ளது. எல்லோரும் இனி காரப்பன் சில்க்ஸில்தான் உடை வாங்க வேண்டும்.

அந்த நிறுவனத்திற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. நேற்று முதல்நாள் இது தொடர்பான டேக் ஒன்று தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. இதற்கு எல்லாம் காரணம் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா செய்த ஒரு டிவிட்தான்.

என்ன சம்பவம்

என்ன சம்பவம்

கோவை மாவட்டம், சிறுமுகை காரப்பன் சில்க்ஸ். இதன் நிறுவனர் காரப்பன் கொஞ்சம் அரசியல் ஈடுபாடு கொண்டவர். கடந்த சில தினங்களுக்கு முன் இவர் திராவிடம் 100 என்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அதில் இந்து மதம் குறித்த கருத்துக்களையும், ஜாதிய அமைப்புகள் குறித்தும் பேசினார்.

தவறான கருத்து?

தவறான கருத்து?

இந்த நிலையில் அவர் இந்து மத கடவுள்களை பற்றி தவறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பான வீடியோக்களும் இணையம் முழுக்க வைரலாக பரவியது. பாஜக ஆதரவாளர்கள் பலர் காரப்பனுக்கு எதிராக கடுமையாக குரல் கொடுக்க தொடங்கினார்கள்.

எச். ராஜா புறக்கணிப்பு

எச். ராஜா புறக்கணிப்பு

பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா இது தொடர்பாக டிவிட் செய்தார். அதில், சிறுமுகை யில் உள்ள காரப்பன் சில்க்ஸ் கடையில் இனி எந்த இந்து உணர்வாளரும் பொருட்கள் வாங்க மாட்டோம் என தீர்மானிப்போம். அவரது மன்னிப்பு போலியானது. இவரது ஸ்தாபனம் மட்டுமல்ல இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் இயக்கத்தைச் சேர்ந்த அனைவரது வர்த்தக ஸ்தாபனங்களையும் புறக்கணிக்க வேண்டும், என்றார்.

ஆதரவு கருத்து

ஆதரவு கருத்து

இதையடுத்து காரப்பன் கடைக்கு ஆதரவாக பலர் குரல் கொடுக்க தொடங்கினார்கள். இதற்காக காரப்பன் சில்க்ஸ் கடைக்கு ஆதரவு தருகிறோம் என்று பொருள்படும் வகையில் #WesupportKaarappansilks என்ற டேக் உருவாக்கப்பட்டது. இது டிவிட்டரில் பெரிய அளவில் வைரலானது.

மன்னிப்பு வீடியோ

மன்னிப்பு வீடியோ

அதே சமயம் தொடர் எதிர்ப்புகளால் காரப்பன் தன்னுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். அப்படி பேசியது தவறு கூறி மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார். ஆனாலும் அவருக்கு எதிராக பாஜக ஆதரவாளர்கள், இந்து அமைப்பினர் விடமால் தீவிரமாக போராடி வருகிறார்கள்.

வழக்கு போட்டனர்

வழக்கு போட்டனர்

இந்த நிலையில் இந்து முன்னணியைச் சேர்ந்த நிர்மல்குமார் என்பவர் காரப்பன் மீது புகார் அளித்துள்ளார். அதேபோல் பாஜக கட்சி சார்பாக கோவை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரில் விரைவில் போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

கைது எப்போது

கைது எப்போது

இந்த புகாரில் மத கலவரத்தை தூண்டுதல், மதத்தை இழிவு செய்தால் என்று இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. இரண்டுமே ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகள் ஆகும். ஆகவே விரைவில் காரப்பன் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+