Valparai Accident: வால்பாறை மலைப்பாதையில் கோர விபத்து.. கொண்டை ஊசி வளைவில் வேன் கவிழ்ந்து 10 பேர் பலி!
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது சாலையோர பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் இருந்து 16 பேர் பயணம் செய்த சுற்றுலா வாகனம் விபத்தில் சிக்கியது.
கேரள மாநிலத்தில் இருந்து 16 பேர் வேனில் சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் இன்று வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி சென்றபோது சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வால்பாறை மலைச்சாலையில் 13ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது வேன் கவிழ்ந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்தக் கோர விபத்தில் 10 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications