விஜய்க்கு கிடைத்த ஸ்டாலின் கனவு திட்டம்.. கோவை பெரியார் அறிவுலகம்..செந்தில் பாலாஜி சும்மா இருப்பாரா?

Subscribe to Oneindia Tamil

கோவை: முதலமைச்சர் விஜய் வருகிற 16 ஆம் தேதி கோவை வரவுள்ளார். அப்போது பெரியார் அறிவுலகத்தை திறந்து வைக்கவுள்ளார். இது முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினின் கனவு திட்டம். திமுக ஆட்சியில் திறப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. செந்தில் பாலாஜியின் தொகுதியில் தான் இந்த கட்டிடம் உள்ளது. விஜய் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. செந்தில் பாலாஜி வேறு திட்டங்களுடன் களத்தில் உள்ளாராம்.

கோவை காந்திபுரத்தில் கடந்த திமுக ஆட்சியில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்படும் என்று அப்போதைய முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்தார். பிறகு அது பெரியார் அறிவுலகம் என்று பெயர் மாற்றப்பட்டது. மொத்தம் 7 தளங்களில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது. திமுக ஆட்சியிலேயே திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் திறக்கப்படும் என ஸ்டாலின் கூறியிருந்தார்.

Periyar Arivulagam Senthil Balaji

விஜய்க்கு கிடைத்த வாய்ப்பு

ஆனால் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. தேர்தல் வந்துவிட்டதால் மேலும் தாமதம் ஏற்பட்டது. இதன் அருகிலேயே செம்மொழி பூங்கா திறக்கப்பட்டது. அது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கனவு. பெரியார் அறிவுலகம் ஸ்டாலினின் கனவு திட்டம். ஸ்டாலின் இதை அப்படித்தான் பார்த்தார். கோவை வந்தபோது கட்டிடத்தை நேரில் ஆய்வு செய்தார். தேர்தல் பிரச்சாரத்தின்போது, திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைந்தவுடன் நடைபெறவுள்ள முதல் அரசு விழா பெரியார் அறிவுலக திறப்பு விழா என கூறினார்.

தேர்தலில் திமுக தோல்வியடைந்ததால் அது நடக்காமல் போனது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு செய்திருந்தார். அந்த வாய்ப்பு இப்போதைய முதலமைச்சர் விஜய்க்கு கிடைத்துள்ளது. கோவையின் இதய பகுதியில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகம் வருகிற 16 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) திறக்கப்படவுள்ளது. விஜய் திறந்து வைக்கிறார். அவருடன் அமைச்சர்களும் கலந்துகொள்கிறார்கள்.

பெரியார் அறிவுலகம்

அதன் பிறகு விஜய் தாராபுரம் சென்று இடைத்தேர்தல் வெற்றிக்கு மக்களுக்கு நன்றி சொல்கிறார். இந்த நேரத்தில் மற்றொரு கேள்வி எழுந்துள்ளது. முதல் தளத்தில் வரவேற்பறை, அறிவியல் மையம், மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகமும், இரண்டாம் தளத்தில் சொந்தமாக புத்தகம் எடுத்து வருபவர்கள் படிப்பதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. மூன்றாம் தளத்தில் போட்டித்தேர்வு பயிற்சி மையம், நிர்வாகப் பிரிவு, நூலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

நான்காம் தளத்தில் வரலாற்று புத்தகங்கள் பிரிவு, தமிழ் நூல்கள் பிரிவு, பருவ இதழ்களும், ஐந்தாம் தளத்தில் ஆங்கில நூல்கள் பிரிவு, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான இன்குபேஷன் சென்டர் உள்ளது. ஆறாம் தளத்தில் ஆங்கிலம் கற்கும் பிரிவு, இன்குபேஷன் சென்டர், எட்டாம் தளத்தில் அறிவியல் மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அரசு ப்ரோட்டோ கால்படி, இந்த நிகழ்ச்சிகளுக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மேயர் உள்ளிட்ட மக்கள் பிரநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி

இந்த கட்டிடம் கோவை தெற்கு தொகுதியில் உள்ளது. செந்தில் பாலாஜி தான் எம்எல்ஏ. அவருக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் கோவை தெற்கு எம்எல்ஏவாக இருந்த வானதி சீனிவாசன் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஆனால் செந்தில் பாலாஜி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது சந்தேகமே. அறிவுலகம் திறக்கப்பட்ட பிறகு செந்தில் பாலாஜி நிர்வாகிகளுடன் பார்வையிட திட்டமிட்டு வருகிறார். ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோரும் பார்வையிடவுள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+