புதிய கல்விக் கொள்கையிலுள்ள நல்ல விஷயங்களை ஏற்க ரெடி.. ஆளுநர் முன்னிலையில் அமைச்சர் பொன்முடி பேச்சு!
கோவை: புதிய கல்விக் கொள்கையின் நல்ல விஷயங்களைப் பின்பற்றத் தயார் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று 37வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழக மாணவர்கள் எந்த மொழியையும் கற்கத் தயாராக உள்ளனர் எனத் தெரிவித்தார்.

ஆளுநருடன் பங்கேற்பு
கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று 37வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி, இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தமிழக ஆளுநர் உடனான தி.மு.க அரசின் மோதல் தொடர்ந்து வரும் நிலையில், இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் பொன்முடி புதிய கல்விக்கொள்கையின் நல்ல திட்டங்களை ஏற்கத் தயார் என்று கூறியுள்ளார்.

பெரியார் மண்
இந்த பட்டமளிப்பு விழாவில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் இன்று உயர்படிப்புகளை மேற்கொள்ள பெண்கள் ஆர்வமாக உள்ளனர். ஒரு காலத்தில் பெண்கள் படிக்கவே கூடாது என்ற சமூகம் இருந்தது. ஆனால் எல்லோரும் படிக்க வேண்டும் என்ற உணர்வை உருவாக்கியிருப்பதுதான் திராவிட மாடல். அதுதான் பெரியார் மண் என்றார்.

இந்திக்கு எதிரானவர்கள் அல்ல
இருமொழிக் கொள்கையே தமிழ்நாடு அரசின் கொள்கை. தமிழக மாணவர்கள் எந்த மொழியையும் கற்கத் தயாராக உள்ளனர். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை ஆளுநருக்கு தெரியப்படுத்தவே இதை கூறுகிறேன். நாங்கள் இந்தி உட்பட எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. இந்தியை கட்டாயமாக்கக்கூடாது. மூன்றாவது மொழியாக எதை வேண்டுமானாலும் படிக்கலாம் எனக் கொண்டு வர வேண்டும்.
Recommended Video

பின்பற்ற தயார்
புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை பின்பற்ற தயாராகவே இருக்கிறோம். தமிழ்நாடு கல்விக் கொள்கையை நிறுவ முதலமைச்சர் குழு அமைத்துள்ளார். தமிழ்நாட்டின் பிரச்சனைகளை ஆளுநர் புரிந்து கொள்வார் என நம்புகிறேன்.
மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப எந்த மொழியையும் மூன்றாவது மொழியாகப் படிக்கலாம். இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்கிறார்கள். இன்று கோவையில் பானிபூரி கடை நடத்துபர்கள் யார்? எனப் பேசினார் அமைச்சர் பொன்முடி.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications