கோவை பெரியார் அறிவுலகத்தில் முறைகேடு எப்படி நடந்திருக்கும்? எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை பெரியார் அறிவுலகத்திற்கு முறைகேடாக கொள்முதல் செய்யப்பட்ட நூல்கள் குறித்த பெருமாள் முருகனின் கட்டுரை மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கடந்த தி.மு.க அரசு வெளிப்படையான நூலக கொள்முதல் கொள்கையை செயல்படுத்தி பொது நூலகத்துறையை சூறையாடி வந்த ஊழல் பெருச்சாளிகளுக்கு முடிவு கட்டிய சூழலில் இப்போது ஒரு ஊர் பேர் தெரியாத பதிப்பகத்திடம் பெரும் தொகைக்கு போலி நூல்கள் பெரியார் அறிவுலகத்திற்கு வாங்கப்பட்டிருக்கும் செய்தி பொது நூலகத்துறையை காலகாலமாக சீரழித்துவந்த சக்திகள் மீண்டும் களத்திற்கு வந்திருப்பதையே காட்டுகிறது. சில அதிகாரிகள்- சில பதிப்பாளர்களின் கூட்டின் மூலமே இது நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று மனுஷ்யபுத்திரன் கூறியுள்ளார்.

எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் வெளியிட்டுள்ள பதிவில் மேலும் கூறுகையில், "இந்நிலையில் கீழ்கண்ட உடனடி நடவடிக்கைகள் தேவை

Periyar Manushyaputhiran

1. பெரியார் அறிவுலகம் போன்ற சிறப்பு நூலகங்களுக்கு நூல்கள் கொள்வது செய்யப்பட்டதற்கு பொதுவான விதிமுறைகள் ஏதும் பின்பற்றப்பட்டதா என்பதைக் கண்டறிய வேண்டும்.
2. வாங்கப்பட்ட நூல்கள் எந்த தரத்தினாலானது என்பதை மதிப்பிடுவதற்கு எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களைக் கொண்ட ஒரு குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.
3.போலி முகவரி அல்லது போலி ISBN மூலமாக நூல்கள் விநியோகிக்கப்பட்டு இருந்தால் அந்த பதிப்பகத்தின் மேல் உடனடியாக சட்ட நடவடிக்கை தேவை.

4. சந்தேகத்திற்கு இடமான வகையில் ஏதேனும் ஒரு பதிப்பகத்தின் நூல் அதிக அளவில் வாங்கப்பட்டிருந்தாலோ அல்லது நிர்ணயிக்கப்பட்ட விலையைத் தாண்டி அதிக விலைக்கு வாங்கப்பட்டிருந்தாலோ அந்த நூலக ஆணையை வழங்கிய அதிகாரிகள் மேல் நடவடிக்கை தேவை.
5. பிழையான, போலியான புத்தகங்களை வழங்கிய பதிப்பாளருக்கு வழங்கப்பட்ட நூலக ஆணை ரத்து செய்யப்பட்டு அந்தப் பணம் திரும்பப்பெறப்பட்டு அந்த நூல்கள் நூலகத்திலிருந்து அகற்றப்படவேண்டும்.

எங்களைப் போன்ற பதிப்பாளர்கள் ஒரு புத்தகத்தை உருவாக்குவதற்கும் அதை விற்பதற்கும் படாதபாடுபட்டு செத்துக்கொண்டிருக்கிறோம். சில நூறு புத்தகங்களை விற்பதற்காக ஊர் ஊராய் புத்தகக் கண்காட்சிகளைத் தேடி அலைகிறோம். ஆனால் சில வழிப்பறிக்கொள்ளையர்கள் அசலான பதிப்பகங்களுக்கு வரவேண்டிய நூலக ஆணைகளை பறித்துக்கொள்வதுடன் நூலகங்களை குப்பைக் கிடங்காக்கி அறிவு சால் இயக்கத்திற்கு புதைகுழி தோண்டுகிறார்கள்" இவ்வாறு மனுஷ்ய புத்திரன் கூறியுள்ளார்
.

இந்த பதிவிற்கு கீழ் கருத்து பதிவிட்டுள்ள நெட்டிசன், "ஏறத்தாழ பெரியார் மற்றும் அறிவியல் மனப்பான்மையை வளர்கக்கூடிய நூல்கள் கண்ணில் தட்டுப்படவில்லை
இது பலரின் கருத்தாக உள்ளது. இதற்கு ஒரு குழு அமைத்து தன்னார்வ ஆய்வை மேற்கொள்ள வேண்டும். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரம்ப நிலையிலேயே கழிவறை தூய்மை பராமரிப்பு மிகவும் மோசமாக உள்ளது. தூய்மைப் பணிக்கான தளவாடங்கள் பணியாளர்கள் பினாயில் போன்ற பொருட்கள் வாங்குவதில் ஊழல் இருப்பதாக தோன்றுகிறது. கழிவறை நாற்றம் உணர முடிகிறது" என்று கூறியுள்ளார்.

கோவை பெரியார் அறிவுலகத்தில் முறைகேடு என்ன

கோவையில் பெரியார் அறிவுலகம் அமைக்கும் பணிகள் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டன. ஆனால் மே மாதம் ஆட்சி மாற்றம் நடந்தது. முதல்வர் ஜோசப் விஜய் கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி கோவை பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்தார். இந்த அறிவுலகத்தைப் பார்வையிட்ட எழுத்தாளர் பெருமாள் முருகன், அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளார். புதிய தலைமுறை ஊடகத்தின் சிந்தை இணையதளத்தில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியிருக்கும் அந்தக் கட்டுரையில், அதிகம் அறியப்படாத 'அகல் விளக்கு' உள்பட சில பதிப்பகத்தின் பெயரில் அச்சிடப்பட்ட 1,800 புத்தகங்கள் அதிக விலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாது என்றும், மற்ற பதிப்பகங்களில் சுமார் ரூ.350-க்கு விற்பனை செய்யப்படும் நாலடியார் நூல்களுடன் ஒப்பிடுகையில், 'நாலடியார் வாழ்வின் வழிகாட்டி' என்ற 300 பக்க நூல் ரூ.1,445 விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அந்த நூல் சூர்யா பாலு என்ற பெயரில் எழுதப்பட்டதாகவும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளார். இப்படி பல்வேறு பெயர்களில் வந்த நூல்கள் ஏஐ தொழில்நுட்பத்தில் எழுதி போலியாக நூல்கள் வெளியிடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளார். இந்தப் புகார் தொடர்பாக சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், எழுத்தாளர் பெருமாள் முருகனின் கட்டுரையைப் படித்தபோது அதிர்ச்சியும் வேதனையும் ஏற்பட்டதாக கூறினார். கொள்முதல் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+