• search
கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"அடித்தே கொல்லப்பட்ட இலங்கை எம்பி!" அதிர்ச்சி அளிக்கும் பிரேத பரிசோதனை முடிவுகள்.. நடந்தது என்ன

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலியான, ஆளும் கட்சி எம்பி அமரகீர்த்தி அத்துகோரளவின் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

  Mahinda Rajapaksa-வை எச்சரித்த தூதர்கள் | Namal Rajapaksa பேச்சு | Sri Lanka MP | Oneindia Tamil

  இலங்கை நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு மிக மோசமான நிலையில் உள்ளது, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

  இருப்பினும், இலங்கை அரசு எடுத்த முயற்சிக்கு சுத்தமாகப் பலன் கிடைக்கவில்லை. அத்தியாவசிய பொருட்களின் விலையும் கூட அங்கு விண்ணை முட்டும் அளவுக்குச் சென்றுவிட்டது.

  ராஜ்யசபாவுக்கு போகும் பிரபல நடிகர்..? - திடீர் மீட்டிங்கின் பின்னணி என்ன? - பரபரக்கும் தகவல்கள்!ராஜ்யசபாவுக்கு போகும் பிரபல நடிகர்..? - திடீர் மீட்டிங்கின் பின்னணி என்ன? - பரபரக்கும் தகவல்கள்!

  இலங்கை

  இலங்கை

  இதன் காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக அங்குள்ள மாணவர்கள் தீவிர போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, இலங்கை நாடாளுமன்றத்தில் நுழைய மாணவர்கள் முயன்றனர். அப்போது அவர்களைக் கலைக்கக் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன.

  வன்முறை

  வன்முறை

  இதனிடையே அமைதியாக நடைபெற்று வந்த மக்கள் போராட்டத்தில் ராஜபக்ச ஆதரவாளர்கள் புகுந்ததால், அது வன்முறையாக மாறியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் மக்கள் போராட்டம் அங்கு இப்போது திடீரென வன்முறையாக வெடித்துள்ளது. அரசு உள்ளிட்ட தனியார் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டது. ராஜபக்சவின் பூர்வீக வீடு உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கும் கூட தீ வைக்கப்பட்டுள்ளது.

  இலங்கை எம்பி

  இலங்கை எம்பி

  இந்த வன்முறையில் இதுவரை அங்கு 9 பேர் பலியாகி உள்ளனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கும் பயன் அளிக்கவில்லை. வன்முறை தொடங்கிய சமயத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த இலங்கை எம்பி அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்தார். அவர் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் பின்னர் போராட்டக்காரர்களை அவரை சூழ்ந்ததால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் முதலில் தகவல் வெளியானது. இந்நிலையில், உயிரிழந்த எம்பியின் பிரேதப் பரிசோதனை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

  நேர்மாறான தகவல்

  நேர்மாறான தகவல்

  போராட்ட சமயத்தில் அமரகீர்த்தி அத்துகோரளவை சுமார் 5,000 பேர் சுற்றிவளைத்துள்ளனர், இதையடுத்து அமரகீர்த்தி அத்துகோரள கட்டிடம் ஒன்றில் தஞ்சம் புகுந்து, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது வெளியாகி உள்ள பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அதற்கு நேர்மாறான தகவல்களே உள்ளன. அதாவது அமரகீர்த்தி அத்துகோரள அடித்துக் கொல்லப்பட்டு உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது

  அடித்துக் கொலை

  அடித்துக் கொலை

  இது குறித்து இலங்கையின் லங்காதீப செய்தித்தாள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், "இலங்கை எம்.பி.யின் உடலில் பல காயங்கள், எலும்பு முறிவுகள் மற்றும் உள் ரத்தப்போக்கு இருந்துள்ளது. அதேநேரம் அவருக்குத் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் எதுவும் இல்லை" என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் உயிரிழந்த அமரகீர்த்தி அத்துகோரளவின் காவலர் துப்பாக்கிச் சூடு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரை கொலை செய்தவர்களைக் கண்டுபிடிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

  புதிய பிரதமர்

  புதிய பிரதமர்

  முன்னதாக வன்முறையைத் தடுக்கும் வகையில் பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்துவோரைக் கண்டதும் சுட உத்தரவிடப்பட்டது. அதேபோல மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், வேறு வழியின்றி மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா ராஜினாமா செய்தார். இதையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவி ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Sri Lankan lawmaker was later lynched by a mob, a forensic report: (அடித்து கொலை செய்யப்பட்ட இலங்கை எம்பி அமரகீர்த்தி அத்துகோரள) All things to know about Sri Lankan MP Amarakeerthi Athukorala death.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X