Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடனே வாங்க! நாட்டில் இவ்ளோ பிரச்சினை இருக்க“ஐபிஎல்” முக்கியமா? இலங்கை வீரர்களை வறுத்தெடுத்த ரணதுங்க

Subscribe to Oneindia Tamil

கொழும்பு : நாட்டில் தலைவிரித்தாடும் பிரச்சினைகளுக்காக மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வரும் நிலையில் சில இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல்லில் ஆடம்பரமாக விளையாடுகிறார்கள் என கூறியுள்ள முன்னாள் வீரர் ரணதுங்க ஐபிஎல்லில் விளையாடும் இலங்கை வீரர்கள் தாயகம் திரும்பி குறைந்தது ஒரு வாரத்திற்கு மக்களுடன் போராடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்நாட்டில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.

இலங்கையில் போராட்டம்

இலங்கையில் போராட்டம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய போராட்டத்தில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சனத் ஜெயசூர்யா , மர்வான் அட்டபட்டு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் . போராட்டத்தில் மக்களுக்கு ஆதரவாக களத்தில் அவர்கள் நின்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த நிலையில் நெருக்கடியைச் சமாளிக்க அதிபர் கோத்தபய ராஜபக்ச மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. கூட்டு அரசாங்கம் அமைக்க வேண்டுமென அவரது கோரிக்கையை எதிர்க்கட்சிகள் நிராகரித்த நிலையில் இன்று அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 ஐபிஎல்லில் இலங்கை வீரர்கள்

ஐபிஎல்லில் இலங்கை வீரர்கள்

இதனிடையே நாட்டில் தலைவிரித்தாடும் பிரச்சினைகளுக்காக மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வரும் நிலையில் சில இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல்லில் ஆடம்பரமாக விளையாடுகிறார்கள் என கூறியுள்ள முன்னாள் வீரர் ரணதுங்க ஐபிஎல்லில் விளையாடும் இலங்கை வீரர்கள் தாயகம் திரும்பி குறைந்தது ஒரு வாரத்திற்கு மக்களுடன் போராடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய அர்ஜுன ரணதுங்க , " "எனக்கு உண்மையில் தெரியாது, ஆனால் சில கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல்லில் ஆடம்பரமாக விளையாடுகிறார்கள், தங்கள் நாட்டைப் பற்றி பேசவில்லை.

அர்ஜுன ரணதுங்க ஆவேசம்

அர்ஜுன ரணதுங்க ஆவேசம்

துரதிர்ஷ்டவசமாக, அரசாங்கத்திற்கு எதிராக பேச பயப்படுகிறார்கள். இந்த கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் வாரியத்தின் கீழ் பணியாற்றுகிறார்கள். அவர்கள் தங்கள் வேலையைப் பாதுகாக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் இப்போது அவர்கள் ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆனால் சில இளம் கிரிக்கெட் வீரர்களும் முன் வந்து போராட்டத்திற்கு ஆதரவாக அறிக்கைகளை வழங்கி வரும் நிலையில் மூத்த வீரகள் ஏன் பயப்படுகின்றனர். ஐபிஎல்லில் விளையாடும் வீரர்கள் யார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் என்று நான் நம்புகிறேன்.

ஆதரவாக வர வேண்டும்

ஆதரவாக வர வேண்டும்

நான் குறிப்பிட விரும்பவில்லை, ஆனால் அவர்கள் ஒரு வாரம் தங்கள் வேலையை விட்டுவிட்டு போராட்டங்களுக்கு ஆதரவாக வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என கூறினார். மேலும் ஏதேனும் தவறு நடந்தால், உங்கள் தொழிலைப் பற்றி சிந்திக்காமல், அதை எதிர்த்துப் பேச உங்களுக்கு தைரியம் இருக்க வேண்டும். நான் ஏன் போராட்டத்தில் இல்லை என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். நான் கடந்த 19 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன்.

Recommended Video

    Reason for Sri Lanka Economic Crisis Explained | OneIndia Tamil
    மிகப்பெரிய பலம்

    மிகப்பெரிய பலம்

    மேலும் இது ஒரு அரசியல் பிரச்சினை அல்ல, இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் போராட்டங்களில் ஈடுபடவில்லை, அதுவே இந்த நாட்டு மக்களின் மிகப்பெரிய பலம் என்று அவர் மேலும் கூறினார். வனிந்து ஹசரங்க (RCB), பானுக ராஜபக்ச (PBKS), மஹேஷ் தீக்ஷனா (CSK), துஷ்மந்த சமீர (LSG), சமிக கருணாரத்னே (KKR) ஆகியோர் தற்போது ஐபிஎல் 2022ல் அங்கம் வகிக்கும் சில முக்கிய இலங்கை சர்வதேச வீரர்கள் ஆவர். ஹசரங்கா மற்றும் ராஜபக்சே ஆகியோர் இலங்கையில் நிலவும் நெருக்கடிகள் குறித்து சமூக ஊடகங்களில் ஏற்கனவே குரல் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+