கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்திய பெருங்கடலில் கால் வைக்க பார்க்கும் சீனா.. இலங்கைக்கு விரைந்த இந்திய ராணுவ தளபதி.. பின்னணி!

Google Oneindia Tamil News

கொழும்பு: இந்திய ராணுவ தளபதி எம்எம் நரவனே இலங்கைக்கு 4 நாட்கள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். தெற்காசிய அரசியலில் பல மாற்றங்கள் நடந்து வரும் நிலையில் இந்த பயணம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Recommended Video

    SriLanka-க்கு விரைந்த Indian Army General..பின்னணி | Oneindia Tamil

    கடந்த 10 வருடமாகவே ஆசிய கண்டத்தில் சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு பக்கம் தென் சீன கடல் எல்லையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா , பிலிப்பைன்ஸ் எதிர்ப்பை மீறி சீனா தனது டிராகன் வாலை நீட்டி வருகிறது. இன்னொரு பக்கம் இந்திய பெருங்கடலில் எப்படியாவது ஆதிக்கம் செலுத்தி விடலாமா என்று போராடிக்கொண்டு இருக்கிறது.

    ஆசியாவில் இருக்கும் சிறிய நாடுகளில் முதலீடு செய்கிறேன் என்ற பெயரில் சீனா மூக்கை நுழைத்துக்கொண்டு இருக்கிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஏற்கனவே சீனாவின் சொல்லுக்கு கட்டுப்படும் நாடுகளாக மாறிவிட்டன.

    'இப்போது ஆப்கானிஸ்தான்.. அடுத்து காஷ்மீர் தான் அவர்களின் குறி..' எச்சரிக்கும் இந்திய ராணுவ தளபதி'இப்போது ஆப்கானிஸ்தான்.. அடுத்து காஷ்மீர் தான் அவர்களின் குறி..' எச்சரிக்கும் இந்திய ராணுவ தளபதி

    சீனா இலங்கை

    சீனா இலங்கை

    இலங்கையிலும் கடந்த சில வருடங்களாக சீனா தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. இலங்கை துறைமுகத்தில் சீனா தளம் அமைத்து இருந்தாலும், அது ராணுவ பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட முடியாது. ஆனாலும் இலங்கை தீவிற்கு அருகே சிறிய பகுதி ஒன்றை வாங்கி உள்ள சீனா அதை தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவும் அறிவித்துள்ளது. இலங்கை மூலமாக இந்திய பெருங்கடலை கட்டுப்படுத்த சீனா நினைக்கிறது.

    சீனா

    சீனா

    சீனாவின் இந்த பூச்சாண்டிக்கு பதிலடி கொடுக்கவே கடத்த வருடம் இந்தியா குவாட் மீட்டிங் நடத்தியது. இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா நாடுகள் இணைந்து குவாட் மீட்டிங் நடத்தியது. நான்கு நாடுகளின் போர் கப்பல்களும் இந்த கடல் பகுதியில் போர் பயிற்சியிலும் கூட ஈடுப்பட்டன. இது இந்திய பெருங்கடலில் இந்தியாதான் கிங் என்பதை உணர்ந்தும் வகையில் இருந்தது.

    இந்தியா கிடையாது

    இந்தியா கிடையாது

    ஆனால் இப்போது யுகே, ஆஸ்திரேலியா, அமெரிக்கா இணைந்து ஆக்கஸ் என்ற கூட்டமைப்பை உருவாக்கி உள்ளது. இதில் இந்தியாவை சேர்க்க முடியாது என்று அமெரிக்கா கூறிவிட்டது. ஆக்கஸ் கூட்டமைப்பு உருவான காரணத்தால் இன்னொரு பக்கம் குவாட் அமைப்பின் முக்கியத்துவம் சரிந்துவிட்டது. இனி குவாட் கூட்டங்கள் வழக்கம் போல நடக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் இலங்கையுடன் உறவை புதுப்பிக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.

    இந்திய பெருங்கடல்

    இந்திய பெருங்கடல்

    இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்த வேண்டும் என்பதால் இலங்கையை தனது பக்கம் இழுக்கும் முயற்சியில் இந்தியா மீண்டும் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியா இலங்கையின் கூட்டு பாதுகாப்பு பயிற்சியால் மித்ரா சக்தி பயிச்சி இலங்கையில் அம்பாரா பகுதியில் நடந்து வருகிறது. கடந்த 4ம் தேதி தொடங்கிய இந்த பயிற்சி 15ம் தேதி வரை நடக்கும்.

    வெளியுறவுத்துறை அதிகாரிகள்

    வெளியுறவுத்துறை அதிகாரிகள்

    இந்த நிலையில்தான் இந்திய ராணுவ தளபதி எம்எம் நரவனே இலங்கைக்கு 4 நாட்கள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். இரண்டு நாட்டு உறவு குறித்தும், கடல் பாதுகாப்பு குறித்து, ராணுவ போர் இணை பயிற்சி குறித்தும் இவர்கள் ஆலோசனை செய்ய உள்ளனர். இலங்கைக்கு சென்ற இந்திய ராணுவ தளபதி எம்எம் நரவனேவிற்கு இலங்கை ராணுவ தளபதிகள் வரவேற்பு கொடுத்தனர்.

    வெளியுறவுத்துறை அதிகாரிகள்

    வெளியுறவுத்துறை அதிகாரிகள்

    இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் சமீபத்தில்தான் சந்திப்பு நடத்தினார்கள். இரண்டு நாட்டு உறவு குறித்து இவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இந்த நிலையில்தான் இந்திய ராணுவ தளபதி எம்எம் நரவனே இலங்கைக்கு 4 நாட்கள் அரசு முறை பயணமாக சென்று இருக்கிறார். இதை ராணுவ ரீதியான பல ஆலோசனைகள் பெறப்படுகிறது. வெளிப்படையாக சீனா பற்றிய விவாதம் இதில் இடம்பெறுவதை பற்றி தகவல் இல்லை என்றாலும், மறைமுகமாக சீனா பற்றி விவாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    English summary
    Why Army General MM Naravane's visit to Sri Lanka is important for India ?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X