• search
கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீக்கிரம் கைதாகும் கோத்தபய ராஜபக்ச? அன்று காப்பாற்றிய "அந்த" வாய்ப்பும் இப்போது இல்லை! பெரிய சிக்கல்

Google Oneindia Tamil News

கொழும்பு: வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியுள்ள இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

நமது அண்டை நாடான இலங்கையில் கடந்த சில காலமாகவே தொடர்ச்சியாகப் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து வருகிறது. இதனால் அங்கு மோசமான பொருளாதார சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

அங்கு சுதந்திரம் அடைந்தது முதல் இல்லாத அளவுக்கு நிலைமை இப்போது உள்ளது. பொறுத்துப் பொறுத்து பார்த்த மக்கள் ஒரு கட்டத்தில் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த துவங்கினர்.

 புலிகளுடனான போரின்போது.. இந்தியாவிற்கு அகதிகளாக வந்த குடிமக்களை திரும்ப அழைக்க குழு: இலங்கை அரசு புலிகளுடனான போரின்போது.. இந்தியாவிற்கு அகதிகளாக வந்த குடிமக்களை திரும்ப அழைக்க குழு: இலங்கை அரசு

 இலங்கை

இலங்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உள்நாட்டுப் போர் செலவுகள், அதிக கடன், கெமிக்கல் உரங்கள் தடை எனப் பல காரணங்கள் கூறப்படுகிறது. அங்கு மின்சாரம், எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கும் கூட தட்டுப்பாடு ஏற்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய மக்கள் போராட்டம் பல மாதங்களாகத் தொடர்ந்தது. இதற்கு அஞ்சி முதலில் பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார்.

 கோத்தபய ராஜபக்ச

கோத்தபய ராஜபக்ச

அதன் பின்னர் நிலைமையைச் சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இருப்பினும், எதுவும் பெரியளவில் உதவவில்லை. இந்தச் சூழலில் தான் மக்களுக்கு அஞ்சி, கடந்த ஜூலை 13இல் இலங்கை அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்ச ரகசியமாக மாலத்தீவுக்கு ஓடினார். அங்கிருந்து சிங்கப்பூருக்குச் சென்ற அவர், அங்கிருந்தபடியே ராஜினாமா செய்தார். அங்கு அவர் இருக்க எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தாய்லாந்துக்குச் சென்றார்.

 நாடு திரும்பினார்

நாடு திரும்பினார்


இந்நிலையில், கோத்தபய ராஜபக்ச இப்போது மீண்டும் இலங்கை திரும்பியுள்ளார். இப்போது ரணில் விக்ரமசிங்க அதிபராகவும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இலங்கை பிரதமராகவும் உள்ளனர். கோத்தபய ராஜபக்சவை விமான நிலையம் சென்று வரவேற்ற ஆளும் கட்சியினர், அவரது இல்லத்திற்கு கடும் போலீஸ் பாதுகாப்பும் அமைத்துக் கொடுத்தனர்.

 கைதாக வாய்ப்பு

கைதாக வாய்ப்பு

இதற்கிடையே அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இலங்கை சட்டப்படி அதிபர் பதவியில் இருப்பவரைக் கைது செய்ய முடியாது. இதன் காரணமாக அழுத்தம் அதிகரித்த போதிலும், இலங்கையில் இருந்த வரை ராஜபக்ச தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. வெளிநாட்டிற்குச் சென்ற பின்னரே அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். இப்போது அவர் அதிபர் பதவியில் இல்லை என்பதால் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

 என்ன வழக்கு

என்ன வழக்கு

அவருக்கு எதிராக இப்போது நீதிமன்ற வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை. அவர் உயர் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த காலத்தில், அவர் மீது ஒரு ஊழல் வழக்கு இருந்தது. அதுவும் அவர் அதிபரான பின்னர் நீக்கப்பட்டது. இருப்பினும், இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போர் முடிந்த பிறகு, இரு இளம் அரசியல் ஆர்வலர்கள் மாயமான வழக்கில் அவரது பெயர் இப்போது அடிபடுகிறது.

 சம்மன்

சம்மன்

ராஜபக்ச இப்போது அதிபர் இல்லை என்பதால், இந்த வழக்கில் அவர் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சம்மன் அனுப்பப்பட உள்ளது என்று பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நுவான் போபகே தெரிவித்தார். அந்த இரு ஆர்வலர்கள் மாயமான போது, கோத்தபய ராஜபக்ச பாதுகாப்புத் துறையில் மிக முக்கியமான இடத்தில் இருந்தார்.

 புகார்

புகார்

அப்போது அவர் கடத்தல் குழுக்களை மேற்பார்வையிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டார். உள்நாட்டுப் போருக்குப் பின்னர், எதிர்ப்புகள் எதுவும் அரசுக்கு எதிராக இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய பல சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளை அவர்கள் கையாண்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த வழக்கில் தான் மகிந்த ராஜபக்ச எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

English summary
Sri Lanka's ousted President Gotabaya Rajapaksa could face legal action over forced disappearances of activists: Gotabaya might be arrested as he doesn't have constitutional immunity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X