என்னை தோற்கடிக்க அதிமுகவும், பாஜகவும் ரூ.40 கோடி இறக்கியிருக்காங்க... திருமா பகீர்
Recommended Video

சிதம்பரம்: தேர்தலில் தன்னை தோற்கடிக்க அதிமுகவும், பாஜகவும் 40 கோடி ரூபாயை இறக்கி இருப்பதாக சிதம்பரம் மக்களவை தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் மக்களவை தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் போட்டியிடுகிறார்.

இன்று பரங்கிபேட்டை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திருமாவளவன், தேர்தல் பிரச்சார குறுந்தகட்டினை வெளியிட்டார்.
அப்போது திருமாவளவன் பேசியதாவது: "விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் யாரும் நாடாளுமன்றத்துக்குள் நுழையக்கூடாது என பாரதிய ஜனதாவினர் கங்கனம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள்.
எனக்கு சிதம்பரம் தொகுதியில் தோற்கடிக்க அதிமுகவும், பாஜகவும் 40 கோடி பணத்தை இறக்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது. அதற்கு காரணம், நான் பாஜகவை எதிர்த்து பேசுவேன். அதிமுகவை எதிர்த்து பேசுவேன். மதவாதத்தை எதிர்த்து பேசுவேன். ஏழை மக்களுக்காக பேசுவேன். உழைக்கும் மக்களுக்காக பேசுவேன் தொழிலாளர்களுக்காக பேசுவேன். விவசாயிகளுக்காக பேசுவேன். எதையும் கண்டித்து பேசுவேன். எச்சரித்து பேசுவேன், பணியமாட்டேன் என்பதால்... இந்த ஆத்திரத்தில் அவர்கள் என்னை தோற்கடிக்க பணத்தை இறக்கியுள்ளனர்" இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications