கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நயினாருக்கு ஆசை".. பட்டென சொன்ன சசிகலா.. டக்கென திரும்பி பார்க்கும் பாஜக.. விழிக்கும் அதிமுக.. பரபர

நயினார் நாகேந்திரன் பேசியது குறித்து சசிகலா பேட்டி தந்துள்ளார்

Google Oneindia Tamil News

கடலூர்: கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த பெண்களின் குடும்பத்தோரை நேரில் சந்தித்து, விகே சசிகலா ஆறுதல் கூறினார்.. பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, இன்றைய தமிழக அரசியல் விவகாரங்கள் குறித்தும் பேசினார்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த அருங்குணம் ஏ.குச்சிப்பாளையம் அருகாமையில் கெடிலம் ஆறு உள்ளது... இந்த பகுதி மக்கள் இந்த கெடிலம் ஆற்றில் குளிப்பது வழக்கம்..

அந்த வகையில், 3 நாட்களுக்கு முன்பு 2 சிறுமிகள் குளிக்க சென்றனர்.. அப்போது திடீரென அவர்கள் தடுப்பணையிலை ஏற்பட்ட நீரின் சுழற்சியில் சிக்கி கொண்டனர்..

அரசியலில் தொடர் சறுக்கல்! கைக்கு எட்டாத அதிமுக.. ஜோதிடரின் அட்வைஸ்படி பெயரை மாற்றுகிறாரா சசிகலா? அரசியலில் தொடர் சறுக்கல்! கைக்கு எட்டாத அதிமுக.. ஜோதிடரின் அட்வைஸ்படி பெயரை மாற்றுகிறாரா சசிகலா?

உயிரிழந்தனர்

உயிரிழந்தனர்

இதனால் 2 சிறுமிகளும் பதறிப்போன நிலையில், அவர்களை காப்பாற்ற, அங்கிருந்த மற்ற 5 சிறுமிகளும் நீரில் குதித்தனர்.. ஆனால் அவர்கள் 5 பேரும் சிக்கினர்.. கடைசியில் 7 சிறுமிகளுமே உயிரிழந்தனர். பிரியா(17), சங்கீதா(17), சுமிதா (16) மோனிகா(15), பிரியதர்ஷினி(14), காவ்யா (10), மற்றும் நவநீதா(9) என்பது அவர்களின் பெயர் ஆகும்.. உடனே தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த பொதுமக்கள், ஆற்றில் மூழ்கிய 7 பேரையும் மீட்டனர்...

 ஏ.குச்சிப்பாளையம்

ஏ.குச்சிப்பாளையம்

108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், 7 பேரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.. இதனால், ஏ.குச்சிப்பாளையம் கிராமமே சோகத்தில் கண்ணீரில் மூழ்கியது.. ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.. இந்நிலையில், இதில், உயிரிழந்த 2 சிறுமிகளின் பெற்றோரை இன்று நேரில் சந்தித்து சசிகலா ஆறுதல் சொன்னார்..

 வெடித்து கதறினர்

வெடித்து கதறினர்

அயன்குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ராஜகுரு பிரியா இவர்களின் மகள்கள் பிரியதர்ஷினி மற்றும் காவ்யா ஆகியோர் இருவருமே இறந்துவிட்டனர்.. இவர்கள் 2 பேரும் சகோதரிகள்.. இவர்களை பறி கொடுத்த தாய், தந்தையரைதான் சசிகலா நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார்.. சசிகலா அங்கு சென்றதுமே, பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர், அவரை பார்த்து கதறி அழுதனர்.. அதிலும் அந்த இளம்தாய், தரையில் புரண்டு வெடித்து அழுதார்.. அதை பார்த்ததும் சசிகலாவும் கண்கலங்கிவிட்டார். உடனே, அந்த பெண்ணின் தோளை தொட்டு ஆறுதல் சொல்லி, "கவலைப்படாதீங்க.. உங்க மகனை நான் பார்த்துக்கறேன்.. நான் இருக்கேன்" என்று நம்பிக்கை வார்த்தைகளை கூறினார்.

 திராவிட மாடல்

திராவிட மாடல்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கெடிலம் ஆற்றில் ஏற்பட்டிருந்த பள்ளத்தை முறையாக மூட வேண்டியது அரசின் பொறுப்பு அதை செய்திருந்தால் இதுபோன்று 7 பேர் உயிர் இழப்பு ஏற்பட்டிருக்காது.. இந்த கிராமத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகள், கழிப்பறை வசதி இல்லாததால் மாற்று பகுதிக்கு சென்று அங்கு குளித்ததால் தான் பலியாகி உள்ளனர். எனவே இந்தக் கிராமம் முழுவதும் கழிப்பறை வசதியை உடனடியாக ஏற்படுத்தித் தரவேண்டும். திராவிட மாடல் என திமுக அரசு இப்போது பேசி வருகிறது...

 நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

ஆனால் அதிமுக ஏற்கனவே திராவிட மாடலை உருவாக்கி சமூக நீதியை செயல்படுத்தி வந்தது.. அதிமுக ஆட்சிகாலத்தில் பெண்களுக்காக முக்கியத்துவம் கொடுத்து பல திட்டங்களை சமுக நீதி நோக்கோடு செயல்படுத்தப்பட்டன... பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட திட்டத்தை ரத்து செய்வது தான் திராவிட மாடலா? பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் நான் பாஜகவிற்கு வரவேண்டும் என கோரிக்கை வைத்தது அவருடைய தனிப்பட்ட கருத்து... அவர் கட்சிக்கு நான் வர வேண்டும் என்ற அவரது ஆசையை தெரிவிக்கிறார் வேறு ஒன்றும் இல்ல.. இப்ப நான்தான் இப்போது எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்" என்றார்.

English summary
cuddalore minor girls drowned in ketilam river and sasikala comforts parents நயினார் நாகேந்திரன் பேசியது குறித்து சசிகலா பேட்டி தந்துள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X