பஸ் ஸ்டாப்பில் மாணவிக்கு மஞ்சள் கயிறு கட்டிய மாணவன் விவகாரம்..சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பஸ் ஸ்டாப்பில் வைத்து பள்ளி மாணவிக்கு மஞ்சள் கயிறை சக மாணவன் கட்டிய வீடியோ ஒன்று கடந்த அக்டோபர் மாதம் சமூக வலைத்தளங்களில் பரவி பெற்றோர்களை பதற வைத்தது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பேருந்து நிலையத்தின் அருகில் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு செல்லும் மினி பேருந்துகளுக்கான பேருந்து நிறுத்தம் உள்ளது.
இந்த பேருந்து நிறுத்த நிழற்குறை ஒன்றில் பள்ளிக்கூட சீருடையில் இருக்கும் மாணவிக்கு சக மாணவன் ஒருவர் மஞ்சள் கயிறு தாலி கட்டுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பெற்றோர்களை பதை பதைக்க வைத்திருந்தது.

மாணவியின் தந்தை மனு
உடனடியாக இந்த வீடியோ காட்சிகள் தொடர்பாக விசாரணையை தொடங்கிய போலீசார் மாணவனிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர். பள்ளி மாணவியை மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

விரிவான உத்தரவுகளை பிறப்பிக்க
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் , மாணவனை கைது செய்தத்து தொடர்பாக விரிவான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டியிருப்பதாக கூறி வழக்கை விரிவாக விசாரிக்க முடிவு செய்தது. அந்த அடிப்படையில் இந்த வழக்கு நீதிபதி பிஎன்.பிரகாஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

மீண்டும் விசாரணை
அப்போது மாணவனை கைது செய்த போலீசாரின் செயலுக்கும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மாணவியை அரசு காப்பகத்தில் ஒப்படைத்ததற்கும் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து பிறப்பித்த உத்தரவில் மாணவியும் மாணவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். மேலும், போக்சோ, சிறார் குற்றங்களை கையாள்வது தொடர்பாக புதிய விதிகளை வகுக்கவும் ஆலோசனை வழங்கியிருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது

காவல்துறையினர் கையாள்வது குறித்து
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் பதிவு செய்த வழக்கின் விசாரணையை சிறார் நீதிக்குழுமத்திற்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதிகள் போக்சோ மற்றும் சிறார் குற்றங்களை காவல்துறையினர் கையாள்வது குறித்து அவ்வப்போது உத்தரவு பிறப்பிக்க வேண்டியிருப்பதால் இந்த வழக்கை சிறப்பு அமர்வுக்கு மாற்றியும் சிறப்பு அமர்வு அமைக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து இருந்தனர். இந்த சிறப்பு அமர்வில் தற்போது இந்த நீதிபதியுடன் அமர்ந்து இருக்கக் கூடிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அந்த அமர்வில் இடம் பெற வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications