சப்பை கட்டு வேண்டாம்.. உண்மையை ஏற்றுக்கோங்க.. தவெக மீது பிரேமலதா விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: தவெக ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகிறது. தவெகவின் வெற்றி தமிழக அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை சரியாகவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்கள். தவெகவுக்கு வாக்களித்த மக்களே வருத்தப்படுவதாக கூறுகிறார்கள். இந்நிலையில் செஞ்சி சிறுமி மாயம், சட்டம் ஒழுங்கு, விவசாயிகள் பிரச்சனையில் தவெக மீது பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

கடலூரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "சட்டம் ஒழுங்கு பிரச்சனை மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. என் தொகுதியில் மக்களுக்கு தொந்தரவாக உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் கொடுத்தேன். இப்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. குடியிருப்பு பகுதி, கோயில், பள்ளி அருகே டாஸ்மாக் பார்கள் அப்படியே தான் இருக்கிறது.

dmdk-premalatha-slams-tvk-government-over-farmers-issue

உரிய நிதி

போதையில்லா தமிழகம் எல்லாரின் கனவு. அதற்காக டாஸ்மாக்குகளையும் ஒரே நாளில் மூட சொல்லவில்லை. நகரில் இருப்பதை புறநகருக்கு கொண்டு செல்ல சொல்கிறோம். இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் இதனால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் தெரு விளக்குகள் கூட இல்லை. மக்களுக்காக உடனடியாக குரல் கொடுக்கிறோம். செய்ய வேண்டிய இடத்தில் உள்ள அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றம் மாற்றம் என வாக்களித்த மக்கள் யோசிக்க வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தில் வேலை கொடுப்பதில்லை. வேலை வருவதே இல்லை என பெண்கள் கூறுகிறார்கள். எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும். அதிகாரிகளுக்கு வேலையை பகிர்ந்து கொடுக்க சொன்னேன். மக்களுக்கு ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. ஆந்திரா அருகே கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 7 மீனவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டனர். இப்போதுவரை அமைச்சரோ, அதிகாரிகளோ எந்த பதிலும் சொல்லவில்லை. அந்த குடும்பத்தினர் தவிக்கிறார்கள். அவர்களுக்கு அரசு உரிய நிதியை கொடுக்க வேண்டும்.

சப்பை கட்டு

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு இடம் பார்த்துள்ளதாக கூறியுள்ளனர். அதை அறிவிக்கவில்லை. தலைமை செயலகம், விமான நிலையத்தில் என்ன முடிவு செய்கிறார்கள் என தெரியவில்லை. செஞ்சி 7 வயது குழந்தை மாயமாகி 23 நாட்களாகிவிட்டது. மக்கள் பெரிய அச்சம், வேதனையில் உள்ளனர். அவரைப்பற்றி எந்த தகவலும் தெரியாமல் திணறுகிறார்கள். ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக பேசப்பட்ட காவல்துறை திணறுகிறது.

சிறுமியை கண்டறிந்து கொடுக்கும் நாள் தான் தமிழகத்திற்கு உண்மையான தீபாவளி. தமிழக அரசு, சிபிசிஐடி விரைவில் சிறுமியை கண்டறிந்து கொடுக்க வேண்டும். நாம் ஆய்வு செய்த பிறகு நெல்களை உரிய கிடங்குக்கு அனுப்பியுள்ளனர். பல கிராமங்களில் கொள்முதல் செய்துள்ளனர். அதையும் அரசு விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும். இல்லையென்று சப்பை கட்டு கட்ட வேண்டாம். மறைத்து வினையாக்காமல் உண்மையை ஒப்புக் கொண்டு, விவசாயிகளுக்கு தீர்வு கொடுங்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+