தொடர் கனமழை.. தமிழகத்தில் தட்டச்சு தேர்வுகள் ஒத்திவைப்பு.. அண்ணாமலை பல்கலைக்கழக பரீட்சை தள்ளிவைப்பு
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற இருந்த தட்டச்சு தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தாமதமாக துவங்கினாலும் தற்போது வெளுத்து வாங்கி வருகிறது. இதற்கிடையே தான் வங்கக்கடலில் நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.
இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோர பகுதிகளையொட்டி நிலவுகிறது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நாளைக்குள் நகரலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

வெளுத்து வாங்கும் கனமழை
இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் நாளை மறுதினம் வரை பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முதலே சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை நாளை மறுநாள் வரை 3 நாட்கள் வரை நீடிக்கும் என கூறப்படுகிறது. இன்று காலை முதல் சென்னை உள்பட மேலும் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் 23 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்துக்கு விடுமுறை
இந்நிலையில் தான் கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மழை பெய்ய துவங்கியது. இன்று அதிகாலை முதல் மாவட்டத்தின் பல இடங்களில் பரலவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக கடலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டது.

தேர்வுகள் தள்ளிவைப்பு
இது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கும் பொருந்தும். இதனால் இன்று சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போது பல்கலைக்கழகத்தில் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்று விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் இன்றைய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும், தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு செய்துள்ளார்.

தட்டச்சு தேர்வுக்கு மாற்று தேதி
மேலும் தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாக தட்டச்சு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாளை, நாளை மறுநாள் நடைபெற இருந்த தட்டச்சு தேர்வுகள் மாற்று தேதியில் நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வுகள் நவம்பர் 19, 20ம் தேதிகளில் நடத்தப்படும் என தட்டச்சு தேர்வு வாரியம் அறிவிப்பு செய்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications