Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னைக்கு ரெஸ்ட்.. கடலூருக்கு ஷிப்ட்.. வெளுத்து வாங்கும் கன மழை.. சூழ்ந்த வெள்ளம்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இரு தினங்களாக பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரை அடுத்து வெள்ளத்திற்கு அதிகம் பாதிக்கப்படுவது கடலூர் மாவட்டமாகும்.

கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில், பரங்கிப் பேட்டை, அண்ணாமலைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம், புவனகிரி, குறிஞ்சிப்பாடி என மாவட்டம் முழுவதும் இடைவிடாமல மழை தூறிக் கொண்டே இருந்தது

தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான இடங்களில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. மாவட்டத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தொடர் மழையால் கடலூர் சுற்றுலா மாளிகை முகப்பு பகுதியில் உள்ள மரத்தில் இருந்து பெரிய கிளைகள் சாலையில் விழுந்தன. யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னர் மரக்கிளை அகற்றப்பட்டது.

முறிந்து விழுந்த மரம்

முறிந்து விழுந்த மரம்

கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் சூழ்ந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கடலூர் சுற்றுலா மாளிகை முகப்பு பகுதியில் உள்ள மரத்தில் இருந்து திடீரென்று பெரிய அளவிலான மரக்கிளைகள் சாலையில் பலத்த சத்தத்துடன் விழுந்தது.

பண்ருட்டியில் பலத்த மழை

பண்ருட்டியில் பலத்த மழை

பண்ருட்டி பகுதியில் பெய்த மழையால் கும்பகோணம் சாலையில் உள்ள கெடிலம் ஆற்றுப் பாலத்தின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. வங்க கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி காரணமாக முடசல்ஓடை பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் மீன் இறங்கும் தளம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக மயிலாடுதுறை , கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தொடர் மழைக் காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது.

டெல்டா மாவட்டங்களில் மழை

டெல்டா மாவட்டங்களில் மழை

வட மாவட்டங்கள் மட்டுமின்றி தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. மயிலாடுதுறையில் பெய்த மழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 2 நாட்களாக பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வெயில்

சென்னையில் வெயில்

சென்னையில் 2 நாட்களுக்கு பிறகு வெயில் இன்று தலைகாட்டியது. இதையடுத்து 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர். சாலைகளில் தேங்கிய மழைநீர் வடிந்ததால் குழிகள் உள்ள பகுதிகளில் கற்கள் போட்டு நிரப்பப்படுகின்றன. பல இடங்களில் வெள்ளநீர் வடிந்துள்ளது. இடைவிடாத மழையால் வீடுகளில் முடங்கிய மக்கள் இன்று வழக்கம்போல பணிகளை மேற்கொண்டனர்.

மழை நீடிக்கும்

மழை நீடிக்கும்

இந்த நிலையில் இன்றைய தினம் கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நீலகிரி, கரூர் ஆகிய 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். நாளை தமிழகத்தில் அநேக இடங்களில் லேசான மழை பெய்யும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+