என் காதலி ‘கபடி’ நான் காதலிப்பதும் ‘கபடி’! களத்திலேயே உயிர்விட்ட வீரர்! கடைசி ஸ்டேட்டஸில் உருக்கம்!
கடலூர் : கடலூர் அருகே கபடி போட்டி விளையாடிக் கொண்டிருக்கும்போதே வீரர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், "என் காதலியும் கபடி நான் காதலிப்பதும் கபடியைத்தான்" என வைத்துள்ள வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் பெரியபுறங்கணி முருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சஞ்சய் என்ற விமல்ராஜ் .
இவர் சேலத்தில் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2ஆம்ஆண்டு படித்து வந்ததோடு, மிகச்சிறந்த கபடி வீரராகவும் இருந்தார். படிப்போடு சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் கபடி பயிற்சியும் பெற்றுவந்தாகக் கூறப்படுகிறது.

கபடி வீரர்
மேலும் அவர் முரட்டுக்காளை அணி என்ற கபடி அணியில் கேப்டனாகவும் உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மாநாடிக்குப்பம் பகுதியில் மாநில அவளவிலான கபடி தொடர் நடைபெற்றது. இதில் புரங்கணி கிராமத்தைச் சேர்ந்த முரட்டுக்காளை அணி வீரர்கள் பங்கேற்றனர். தனது அணி சார்பாக விமல் களமிறங்கி விளையாடினார்.

திடீரென மயக்கம்
அப்போது போட்டியின் கடைசி நிமிடத்தில் லாஸ்ட் ரைடு சென்ற விமல் எதிரணி வீரர்களை தொட்டுவிட்டு எல்லைக்கோட்டை அடைந்தார். அப்போது அவரை பிடிக்க முயன்ற போது விமல் தவறி கீழே விழுந்தார். எல்லைக்கோட்டை அவர் அடைந்ததாக நடுவர் விசில் அடித்ததை எடுத்து வீரர்கள் அவரை விட்டு நகர் சென்றனர் அப்போது எழுந்து நடக்க முயன்ற திடீரென மயங்கி சரிந்தார்.

பெரும் அதிர்ச்சி
இதனை தொடர்ந்து அவரது சகவீரர்கள் மற்றும் போட்டி அமைப்பாளர்கள் விமலை மீட்டு பண்ருட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மரணத்திற்கு சில நொடிகளுக்கு முன்பு வரை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்த விமல் ராஜ் மரணம் அடைந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மேலும் கடைசியாக அவர் விளையாண்ட வீடியோவும் சமூக வலைதளங்களை வெளியானது.

கோரிக்கை
இதையடுத்து தமிழகம் முழுவதும் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத அவரது சக நண்பர்கள் தாங்கள் வென்ற வெற்றிக் கோப்பையை விமல்ராஜ் உடலுடன் வைத்து புதைத்தனர். விமல் ராஜின் குடும்பத்தினருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வரும் நிலையை அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர் இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தார்.

அளவில்லா காதல்
விமல்ராஜ் குறித்து அவர் நண்பர்களிடளும் விசாரித்த போது பல நிகழ்ச்சி தரும் தகவல்கள் கிடைத்தன. கபடி விளையாட்டின் மீது விமல்ராஜ் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் எனவும் நேரம் கிடைக்கவில்லை என்றாலும் படிப்பை கூட ஒதுக்கி வைத்துவிட்டு கபடி விளையாட்டில் ஆர்வம் காட்டுவார் என்றும் கூறினர். மேலும் 2019 ஆம் ஆண்டு அவர் செல்போன் வாங்கிய பொழுது தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்ல் "என் காதலி கபடி நான் காதலிப்பதும் கபடியை தான்" என வைத்துள்ளார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆன போதிலும் அதே ஸ்டேட்டஸ் தான் தற்போது வரை உள்ளது அந்த அளவுக்கு கபடி மீது அவர் அளவில்லா காதல் கொண்டார் என அவரது நண்பர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications