கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீட் மறுப்பால் விரக்தி... அரசியலில் இருந்து விலகிய அதிமுக எம்.எல்.ஏ? வைரலாகும் போஸ்டர்

Google Oneindia Tamil News

கடலூர்: பண்ருட்டி அதிமுக எம்எல்ஏவான சத்யா பன்னீர்செல்வம் தனக்கு இந்த முறை சீட் மறுக்கப்பட்டதால் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ளதாக தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Recommended Video

    அமைச்சரின் தலையிட்டால் எம்.எல்.ஏ விரக்தி... அரசியலில் இருந்து விடுபடுவதாக அறிவிப்பு!

    கடலூர் மாவட்டம் பண்ருட்டித் தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெண் எம்எல்ஏ- சத்யா பன்னீர்செல்வம். கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் சீட் பெற்ற இவருக்கு இந்த முறை சீட் தரப்படவில்லை.

    எடப்பாடி பழனிசாமி vs ஸ்டாலின்... சிறந்த முதல்வர் வேட்பாளர் யார்? வெளியான ஏபிபி கருத்துக்கணிப்பு எடப்பாடி பழனிசாமி vs ஸ்டாலின்... சிறந்த முதல்வர் வேட்பாளர் யார்? வெளியான ஏபிபி கருத்துக்கணிப்பு

    கடந்த முறை ஜெயலலிதா, தகுதி மற்றும் திறமை, செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் தனக்கு விருப்பமானவர்களுக்கு சீட் அளித்தார். அப்படி சீட் பெற்ற பலர் இதற்கு முன்பு அரசியலில் பிரபலம் ஆனவர்கள் இல்லை.

    சீட் தர முடியாத நிலை

    சீட் தர முடியாத நிலை

    ஆனால் கடந்த முறை சீட் பெற்ற பலருக்கு இந்த முறை சீட் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் கடந்த முறை 234 தொகுதியிலும் அதிமுக தனித்து களம் கண்டது. ஆனால் இந்த முறை கூட்டணியில் போட்டியிடுவதால் பலருக்கு சீட் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிமுக தலைமை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    எம்சி சம்பத்துடன் மோதல்

    எம்சி சம்பத்துடன் மோதல்

    பண்ருட்டி அதிமுக எம்எல்ஏவான சத்யாபன்னீர்செல்வத்திற்கு இந்த முறை சீட் வழங்கப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வந்தார். இருப்பினும் கடலூர் தொகுதி எம்எல்ஏவும், தொழில்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத்துடன் கருத்து வேறுபாடு இருந்து வந்ததால், அவருக்கு எதிரணியான கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரான அருண்மொழித்தேவனுடன் இணைந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    சொரத்தூர் ராஜேந்திரன்

    சொரத்தூர் ராஜேந்திரன்

    இந்த நிலையில் தற்போது நடைபெற உள்ள 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்புக் கேட்டு அதிமுக தலைமையிடம் விண்ணப்பித்திருந்த நிலையில், குறிஞ்சிப்பாடி முன்னாள் எம்எல்ஏ-வான சொரத்தூர் ராஜேந்திரனுக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தப் பின்னனியில் அமைச்சர் சம்பத்தின் பங்கு இருப்பதாக கருதிய சத்யா பன்னீர்செல்வம், கட்சித் தலைமையிடம் தனக்கு வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.

    அரசியல் விலகல்

    அரசியல் விலகல்

    இந்நிலையில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சொரத்தூர்.ராஜேந்திரன் பண்ருட்டி பகுதியில் உள்ள தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் விரக்தியடைந்த பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக கூறியுள்ளதாக போஸ்டர் ஒன்று வலைதளங்களில் வைரலாக பரவியது.

    English summary
    Panruti AIADMK MLA Sathya Panneerselvam has reportedly announced her withdrawal from politics as she was denied a seat this time.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X